"நிஜமாவே 42 வயசா..? - செம்ம செக்ஸி..." - மின் விளக்கு வெளிச்சத்தில் அசர வைத்த "அசுரன்" மஞ்சு வாரியார்.!

 
மஞ்சு வாரியர் தற்போது இளம் நடிகைகளை விட பிஸியான நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அசுரன், பிரதி பூவன்கோழி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் லலிதம் சுந்தரம் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். 
 
இதில் கதாநாயகனாக நடிப்பவர் இளம் நடிகர் சன்னி வெய்ன்.. இந்த படத்தை மஞ்சு வாரியாரின் தம்பி மது வாரியர் இயக்க உள்ளார் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக இந்த கதையை உருவாக்கியுள்ளாராம் மது வாரியார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் ஒரு தொழிலதிபராக நடிக்கிறாராம். 
 
இதுவரை அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் மஞ்சு வாரியர். 
 
இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் தனுஷின் மனைவியாக எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். 
 
 
இதையடுத்து மலையாளத்தில் பிசியான மஞ்சு வாரியர், மோகன்லாலுடன் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், மம்முட்டியுடன் தி பிரீஸ்டு, நிவின் பாலியுடன் படவெட்டு என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். 
 
 
இந்நிலையில், மஞ்சுவாரியரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 42 வயதான மஞ்சுவாரியரா இவர்? என்று நினைக்கும் அளவுக்கு மிகவும் இளமையாக உள்ளார்.


இன்றைய இளம் டாப் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அந்த புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
------Advertisement------
------Advertisement------