"தெரியாம அப்லோட் பண்ணிட்டாங்க போல.." - மேகா ஆகாஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
தமிழில் ரஜினியின் பேட்ட படம் மூலம் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
விஜய்சேதுபதியுடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடித்து வருகிறார். மேகா ஆகாஷ் அளித்துள்ள பேட்டியில், ''பெண்ணாக பிறந்தால் அப்பா, அம்மா அன்பு, திருமணம் ஆனபிறகு கணவரின் அன்பு அதன்பிறகு குழந்தைகள் அன்பு என்று அனேக அன்புகளை படிப்படியாக பார்க்க வேண்டி இருக்கிறது. 
 
நம்மை நல்ல மனிதர்களாக வளர்த்து விடுவது பெற்றோர் காட்டும் அன்புதான். அன்பு என்பது பெரிய விஷயம். மிகவும் சிறந்தது. அதில் சுயநலம் கிடையாது. பையனும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்தால் அது காதல் கிடையாது. நான்காம் வகுப்பில் எனது பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையன் மீது எனக்கு இஷ்டம் இருந்தது. அதுதான் எனது முதல் காதல். 
 
காதல் என்றால் என்ன என்று தெரியாத வயது அது. நிஜ வாழ்க்கையில் நான் காதல் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்’’ என்றார்.சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள்.
 
அப்படி ஒருவர் தான் இந்த மேகா. முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார் அம்மணி. 
 
 
இந்நிலையில், தற்போது விட்ட வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவார் என்று பார்த்தால், நிலைமை தலை கீழ். இப்போது இவர் கொஞ்சம் கேஷுவல் புகைப்படங்களை இறக்கி வருகிறார். 


ஆனால், சமீப காலமாக ஹாட்க சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், தெரியாம அப்லோட் பண்ணிட்டாங்க போல.. என கலாய் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

"தெரியாம அப்லோட் பண்ணிட்டாங்க போல.." - மேகா ஆகாஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! "தெரியாம அப்லோட் பண்ணிட்டாங்க போல.." - மேகா ஆகாஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 02, 2021 Rating: 5
Powered by Blogger.