இதனால் தான் அந்த பழக்கத்திற்கு அடிமை ஆனேன் - கூச்சமே இல்லாமல் கூறிய ஜெயம் ரவி பட நடிகை..!


கன்னட திரைத்துறையினருக்கு கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கன்னட நடிகை ராகினி கடந்த வெள்ளிக்கிழமை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 
 
பெங்களூருவையே உலுக்கிய போதைப்பொருள் வழக்கில் கன்னட திரை உலகில் பிரபல நடிகைகளான ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 18-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 
 
நடிகைகள் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தனர். இவர்களில் நடிகை ராகிணியின் ஜாமீன் மனுவை ஏற்கனவே பெங்களூரு சிறப்பு கோர்ட்டு மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
 
அவரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இந்த விசாரணையில், முழுவதுமாக அதிகாரிகளுக்கு ஒத்துழைக்காத நடிகை ராகினி, அவரிடம் கேட்கப்பட்ட ஐம்பது கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. 
 
மேலும், " திரையுலகினருக்கு போதை பொருள் சப்ளை செய்த ரவிசங்கரின் வற்புறுத்தல் காரணமாகவே தான் போதை பழக்கத்திற்கு அடிமையானதாகவும், முதலில் இருந்து வாடிக்கையாளராக போதைப்பொருளை பெற்று வந்தேன் என்றும், மற்றபடி எனக்கு தெரியாது " என்றும் கூறியுள்ளார்.
இதனால் தான் அந்த பழக்கத்திற்கு அடிமை ஆனேன் - கூச்சமே இல்லாமல் கூறிய ஜெயம் ரவி பட நடிகை..! இதனால் தான் அந்த பழக்கத்திற்கு அடிமை ஆனேன் - கூச்சமே இல்லாமல் கூறிய ஜெயம் ரவி பட நடிகை..! Reviewed by Tamizhakam on September 27, 2021 Rating: 5
Powered by Blogger.