முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் பிக்பாஸ் ஓவியா..! - பதறிப்போன ரசிகர்கள்..!

 
“களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார். 
 
யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான். 
 
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத ஓவியா அவ்வப்போது தனது போட்டோஸை வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து வருகிறார். 
 
 
இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்சிகளில் டூ பீஸ் உடையணிந்து நடிக்கவுள்ளாராம் அம்மணி. 
 
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பத்து எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ் கிரைம், த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளது. அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் இந்த வெப்சீரிஸில் அட்ராசிட்டி பண்ண ரெடியாகி விட்டார் அம்மணி. 


சென்சார் உள்ள சினிமாவிலேயே அந்த காட்டு காட்டுவார், சென்சார் இல்லாத வெப் சீரிஸில் என்ன என்ன காட்டப்போகிறாரோ என்று பதறி போய் கிடக்கிறார்கள் ரசிகர்கள்..

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் பிக்பாஸ் ஓவியா..! - பதறிப்போன ரசிகர்கள்..! முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் பிக்பாஸ் ஓவியா..! - பதறிப்போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 23, 2021 Rating: 5
Powered by Blogger.