அபிஷேக் செய்த ஆராய்ச்சி..! - செருப்பை கழட்டிய நமீதா..! - முதல் நாளே பிக்பாஸ் பரபரப்பு..!

 
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. 
 
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது. 
 
இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். 
 
இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது போட்டியாளராக திருநங்கை நமீதா மாரிமுத்து களமிறங்கியிருக்கிறார். 
 
 
வீட்டிற்குள் சென்ற அவரிடம் யூட்யூப் பிரபலமான அபிஷேக் உங்க செருப்பை கழட்டுங்க உங்களோட ஒரிஜினல் ஹைட் என்னன்னு பாக்கணும் என்று சக போட்டியாளர் ராஜு-வை விட நீங்க ஹைட்டா-ன்னு பாக்கணும் என கூறினார்.

 
இதனை தொடர்ந்து, செருப்பை கழட்டி விட்டு நின்ற நமீதாவையும், ராஜு-வையும் அருகருகே நிற்க வைத்து யார் ஹைட்டாக இருக்கிறார் என்று உலக நாடுகள் பலவும் பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்தார் அபிஷேக்.
அபிஷேக் செய்த ஆராய்ச்சி..! - செருப்பை கழட்டிய நமீதா..! - முதல் நாளே பிக்பாஸ் பரபரப்பு..! அபிஷேக் செய்த ஆராய்ச்சி..! - செருப்பை கழட்டிய நமீதா..! - முதல் நாளே பிக்பாஸ் பரபரப்பு..! Reviewed by Tamizhakam on October 03, 2021 Rating: 5
Powered by Blogger.