"பாத்தாலே எச்சில் ஊறுதே.." - நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படம் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் வாயில் எச்சில் ஊற வைத்துள்ளது. 
 
தமிழ் திரையுலகில் பாபநாசம் படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு மகளாகவும், தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாகவும் நடித்து புகழ்பெற்றவர் நிவேதா தாமஸ். 
 
இரண்டு படங்களின் கதையும் இவரை மையமாக வைத்து தான் அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் இரு படங்களிலும் நிவேதா தாமஸின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 
 
இதனால் இளசுகளின் கனவு கன்னியாக மாறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வரும் நிவேதா தாமஸுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதுவும் அம்மணிக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. 
 
தற்போது பவன் கல்யாணுடன் ‘வக்கால் சாப்’ என்ற படத்திலும் நிக்கில் சித்தார்த்தாவுடன் ‘சுவாஸா’ என்ற படத்திலும் நடித்ததிருந்தார் நிவேதா தாமஸ். சமூக வலைதளங்களில் ஆக்டிவ் குயினாக வலம் வரும் இவர் தற்போது தன்னுடைய டின்னரை ஒரு புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். 
 

இதனை பார்த்த ரசிகர்கள், பாத்தாலே எச்சில் ஊறுதே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
------Advertisement------
------Advertisement------