குத்து ரம்யாவா இது...? - செம்ம ஹாட்.. - சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..!

 
கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா தமிழில் பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். காங்கிரஸ் சார்பில் 2013-ம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதே தொகுதியில் 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். 
 
அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவு தலைவியாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் ரம்யா மாயமானார். 
 
அவரும் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ரபேலும் காதலிப்பதாகவும் துபாயில் நடக்க இருந்த இவர்கள் திருமணம் ரத்தாகி விட்டதாகவும் தகவல் வெளியானது. ரம்யாவுக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. 
 
 
திருமணம் முடிவாகும்போது வெளிப்படையாக அறிவிப்போம். ரம்யாவின் திருமணம் குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். ரம்யா அரசியலிலும் ரபேல் அவரது தொழிலிலும் கவனம் செலுத்தியதால் அதிகம் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. 
 
மேலும் ரம்யாவுக்கு இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை. ரபேலுக்கும் போர்ச்சுக்கல்லை விட்டு வர மனமில்லை. இதனால் இருவரும் பரஸ்பரம் பேசி பிரிந்து விட்டனர் என்பதுதான் உண்மை. இப்போது அவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.” என்று ரம்யாவின் அம்மா கூறியுள்ளார்.
 
 
இந்நிலையில் அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி ஒரு படத்தில் நடிக்க ரம்யா ஒப்பந்தமாகியுள்ளார். 
 
அதில் ஹீரோ ரம்யாவை அடிப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட இருந்தது. இதனால் டென்ஷனான ரம்யா, என்னை யாருன்னு நெனச்சீங்க, இந்த காட்சியில் எல்லாம் நடிக்க முடியாது. 
 
 
அதற்கு வேற ஆளை பாருங்கள் என இயக்குனரிடம் கோபமாக கூறியிருக்கிறார். இதனால், அம்மணியின் சினிமா வாழ்கையும் கேள்வி குறியாகியுள்ளது. 


தற்போது கன்னட சினிமாவில் சில படங்களில் நடித்து வருகிறார். இடையில், உடல் எடை கூடி குண்டான இவர் தற்போது மீண்டும் உடல் எடை குறைத்து சிக்கென மாறியுள்ளார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

குத்து ரம்யாவா இது...? - செம்ம ஹாட்.. - சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..! குத்து ரம்யாவா இது...? - செம்ம ஹாட்.. - சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..! Reviewed by Tamizhakam on October 07, 2021 Rating: 5
Powered by Blogger.