விஜய் டிவியில் குடும்ப கதைகளை மையமாக வைத்து பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள்.அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை பவித்ரா ஜனனி. இவர் இதற்கு முன்பு சில சீரியல்களில் நடித்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இவர் மற்ற நடிகைகளைப் போலவே தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இதன் மூலம் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.
முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது திரைப்பட நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து உள்ளது.
அதற்கான முக்கிய காரணம், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வரும் மலராக நடிக்கும் பவித்ரா ஜனனிக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
சென்னை பெண்ணான இவர், கல்லூரி காலத்தில் நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் தான் ஆபிஸ் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது அவர் தானா என அடையாளம் தெரியாத அளவு போட்டோஷூட் நடத்தியுள்ளார். உடலோடு ஒட்டி உறவாடும் டைட்டான ட்ரெஸ்-ஐ அணிந்து கொண்டு படு சூடான கவர்ச்சி போஸ்கொடுத்துள்ள அம்மணியை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்