முதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன்... - வாயடைத்து போய் கிடக்கும் ரசிகர்கள்..!

 
லட்சுமி மேனன் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
முதன்முதலாக மலையாளத்தில் 2011-ம் ஆண்டு வெளிவந்த 'ரகுவிண்டெ சுவந்தம் ரசியா' என்ற திரைப்படத்தில் நடித்தார். வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த,கும்கி மற்றும் சுந்தர பாண்டியன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகம் அவரை திரும்பி பார்த்தது.
 
 
 2014-ம் ஆண்டு வெளியான 'நான் சிகப்பு' மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை கூட்டினார்.சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
 
2016-ல் விஜய் சேதுபதியுடன் 'றெக்க' படத்தில் நடித்த பிறகு இவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. பின்னர் விக்ரம் பிரபுவுடன் 'புலிக்குத்தி பாண்டி' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற்போது ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 
 

முதன் முறையாக நீச்சல் உடையில்..

 
 
இந்த "ஏஜிபி" படம் திகில் கதையம்சம் கொண்ட திரைப்படம். இதுவரை காதல்,காமெடி,ஆக்‌ஷன் போன்ற கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை லட்சுமி மேனன், தற்போது முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த படத்தில் நடிக்கிறார்.
 
இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்க உள்ளார்.நயன்தாரா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக உயர்ந்துள்ளதால், தற்போது லட்சுமி மேனனும் அந்த பாணிக்கு மாறியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சிலபல பேச்சுக்கள் எழுந்துள்ளன.
 
இந்த படத்தில் முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க ஒகே சொல்லியுள்ளார் என்ற தகவலும் கோலிவுட்டை கலக்கி வருகின்றது. ரீ என்ட்ரி கொடுக்கும் முதல் படத்திலேயே ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் முயற்ச்சியாக லக்ஷ்மி மேனன் இந்த தில்லான முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.
முதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன்... - வாயடைத்து போய் கிடக்கும் ரசிகர்கள்..! முதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன்... - வாயடைத்து போய் கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 05, 2021 Rating: 5
Powered by Blogger.