லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. என்ன கன்றாவி இது..? - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் - தம்பி பாசத்தை அடிப்படை கதையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 
 
சாதாரண மளிகை கடைக்காரர் குடும்பத்தில் அண்ணன், தம்பிகளுக்கு நடக்கும் பாச போராட்டங்கள் தான் கதை. சிம்பிளாக இருந்தாலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். 
 
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை - கதிர் ஜோடிக்கு அடுத்த படியாக ரசிகர்களை கவர்ந்தது மீனா - ஜீவா ஜோடி தான். எம்.சி.ஏ. படித்த ஹேமா ராஜ்குமார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். 
 
பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் துவங்கினார். குல தெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார் ஹேமா. அவர் பாயும் புலி, அட்டக்கத்தி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.
 
 
ஹேமாவுக்கும், சதீஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹேமா தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சதீஷ் தன் மனைவி ஹேமாவுக்கு பக்கபலமாக இருக்கிறார்.
 
 
அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது லெக்கின்ஸ் பேண்ட், புடவை சகிதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 

இதனை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி இது..? என்று கலாய்த்து வருகிறார்கள்.
லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. என்ன கன்றாவி இது..? - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..! லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. என்ன கன்றாவி இது..? - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 14, 2021 Rating: 5
Powered by Blogger.