மீண்டும் ஒரு புது வீடு... யாருக்காக? அதீத வளர்ச்சி அடைந்த அனிதா சம்பத்!

அனிதா சம்பத்: 

செய்தி வாசிப்பாளினியாக தனது வாழ்க்கை பயணத்தை துவங்கிய அனிதா சம்பத் பிரபலமான ஹீரோயின் ரேஞ்சிற்கு ஃபேமஸ் ஆகிவிட்டார். இவர் செய்தி தொகுப்பாளினியாக இருந்து வந்தபோது திடீரென சமூக வலைதளங்களில் இவரது வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார். 

அனிதா சம்பத் பாலிமர், நியூஸ் 7 ,தமிழன், சன் தொலைக்காட்சிகளில் உள்ளிட்டவற்றில் பணியாற்றி இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் காலையில் ஒளிபரப்பாகப்படும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பணியாற்றியதன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டார்.

திரைப்படங்கள்: 

இது தவிர அவர் சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களை பணியாற்றி இருக்கிறார். "எமர்ஜென்சி" என்ற வலைத்தொடரிலும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனிடையே அனிதா சம்பத் சமூக வலைதளங்களில் திடீரென டிரெண்டானதால் அவர் மிகப்பெரிய ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒரே நைட்டில் பேசப்பட்டார்.


2.0,ஆதித்ய வர்மா , தர்பார், இரும்பு மனிதன், தேனி உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது . தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் அனிதா சம்பத்திற்கு பெயரும் புகழும் மிகப்பெரிய அடையாளமும் கிடைத்தது.

திருமண வாழ்க்கை: 

இதனிடையே தன்னுடன் வேலை பார்த்து வந்த பிரபாகரன் என்ற கிராபிக் டிசைனரை கடந்த 2019 ஆம் ஆண்டு மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் செய்து கொண்டார். 

காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் செய்து கொண்ட அனிதா சம்பத் திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் வாழ்வில் லட்சியங்களையும் கனவுகளையும் எட்டிப்பிடித்து தொடர்ந்து அதற்காக பயணித்து வருகிறார்.


அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்னர் அவர்கள் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி அதில் குடிபெயர்ந்தார்கள். அதன் கிரகப்பிரவேச புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்றெடுத்தார்கள். 

புதிய வீடு.. யாருக்காக? 


அந்த வகையில் தற்போது மீண்டும் இவர்கள் மற்றொரு புதிய வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக அதன் புகைப்படங்களையும் கிரகப்பிரவேசம் போட்டோக்களையும் இணையத்தில் வெளியிட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.







அந்த பதிவில் அனிதா சம்பத் கூறியிருப்பதாவது நம்முடைய இரண்டாவது வீடு இது என்னுடைய அம்மாவுக்காக உங்க அன்பு இல்லாமல் எங்களுடைய வளர்ச்சி சாத்தியமே இல்லை எனக் கூறி ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.