15,000 போச்சு.. சைபர் மோசடியில் சிக்கிய சின்னத்திரை நடிகர் செந்தில்.. கதறும் வீடியோ..!
சின்னத்திரையில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் செந்தில். இவர் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அண்ணா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் செந்தில், தான் சைபர் கிரைம் மோசடியில் பணத்தை இழந்ததாக கூறி அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், தனக்கு நடந்த சைபர் கிரைம் மோசடி குறித்து விவரித்துள்ளார். செந்தில் கூறியதாவது: "எனக்கு தெரிந்த நபர் ஒருவர் வாட்சப் மூலம் மெசேஜ் அனுப்பினார்.
அதில் அவசரமாக 15 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுவதாக கேட்டிருந்தார். நான் டிரைவிங்கில் இருந்ததால், உடனடியாக அவர் அனுப்பிய வாட்சப் எண்ணுக்கு பணத்தை அனுப்பிவிட்டேன்.
பணம் அனுப்பிய பிறகு, அந்த வாட்சப் எண்ணில் இருந்த பெயரை கவனித்தபோது, அது வேறொருவரின் பெயராக இருந்தது. சந்தேகம் அடைந்து அந்த எண்ணுக்கு போன் செய்து விசாரித்தபோது, தான் அவருடைய வாட்சப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், இது போல இன்று மட்டும் சுமார் 500 பேர் அவருக்கு கால் செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்."
"அப்போது தான் நான் சைபர் கிரைம் மோசடியில் பணத்தை இழந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன்" என செந்தில் தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகர் செந்தில், பிரபலமான நடிகர் என்பதால் இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரபல நடிகரே இது போன்ற மோசடியில் சிக்கியது கவலை அளிக்கிறது. இந்த சம்பவம் மூலம், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் உலகில் இருக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது.
யாராவது பணம் கேட்டால், அவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதும், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பதும் இதுபோன்ற மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
நடிகர் செந்தில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் இந்த மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Comments
Post a Comment