அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள் அறிவிப்பு..! 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!


இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master) பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஜனவரி 2025 முதல் கட்ட அறிவிப்பின்படி, மொத்தம் 21,413 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. மேலும், இதில் தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது.
 

இந்திய அஞ்சல் துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025: முக்கிய தகவல்கள்

  • நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை
  • பதவிகள்: கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master)
  • மொத்த காலியிடங்கள்: 21,413 (தமிழ்நாட்டில் மட்டும் 2,292)
  • கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி
  • வயது வரம்பு: 18 - 40 வயது (இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு தளர்வு உண்டு)
  • தேர்வு முறை: 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்
  • விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை)
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் https://indiapostgdsonline.gov.in/


பதவிகளின் விவரங்கள்


  • கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master): கிளை தபால் நிலையத்தின் தலைவர். தபால் மற்றும் பார்சல் வினியோகம், கணக்கு பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்வார்.
  • உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master): கிளை போஸ்ட் மாஸ்டருக்கு உதவியாக செயல்படுவார். தபால் மற்றும் பார்சல் வினியோகம், கணக்கு பராமரிப்பு போன்ற பணிகளில் உதவுவார்.


கல்வித் தகுதி


விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

10-ம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்திருக்க வேண்டும். மேலும், கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு


விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 40 வயது வரை இருக்கலாம். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

  • எஸ்சி/எஸ்டி பிரிவினர்: 5 வருடங்கள் தளர்வு
  • ஓபிசி பிரிவினர்: 3 வருடங்கள் தளர்வு
  • மாற்றுத்திறனாளிகள்: 10 முதல் 15 வருடங்கள் தளர்வு


தேர்வு முறை


விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு மற்றும் நேர்காணல் எதுவும் கிடையாது. விண்ணப்பதார்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் தொழில்நுட்ப முறையில் கணக்கிடப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை


விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indiapostgdsonline.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி


விண்ணப்பிக்க கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் தேதி குறிப்பிடப்படும்.
கூடுதல் தகவல்கள்

  • இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
  • இப்பதவிகளுக்கு எந்தவித தேர்வும் கிடையாது. விண்ணப்பித்தால் போதுமானது.
  •  மதிப்பெண், இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.


இந்த வேலை வாய்ப்பு பற்றிய மேலும் தகவல்களை அறிய, இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

முக்கிய நாட்கள்

விவரம்முக்கிய நாட்கள்
விண்ணப்பிப்பம் தொடங்கிய நாள்10.02.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்03.03.2025
விண்ணப்பம் திருத்த செய்ய அவகாசம் 06.03.2025 முதல் 08.03.2025
தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல்பின்னர் அறிவிக்கப்படும்

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்