பொம்பள மாதிரி உக்கார சொல்லுவாங்க.. நான் இப்படித்தான் உக்காருவேன்.. மாளவிகா உச்ச கட்டம்!

1999-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘உன்னைத் தேடி’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. 

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, 90கள் மற்றும் 2000களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். 

‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் ‘கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’ பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். 

திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் இருந்து விலகி, மும்பையில் குடியேறிய மாளவிகா, தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.சமீபத்தில், மாளவிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

பளிச்சென்று தெரியும் தனது தொடையழகை வெளிப்படுத்தும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. 

“இது போன்ற இரவுகள் தங்கத்தால் செய்யப்பட்ட கனவுகளை தருகிறது” என்று அவர் பதிவிட்ட கமெண்ட், புகைப்படங்களுக்கு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் பலரும், “பொம்பள மாதிரி உட்காருங்க” என்று கிண்டலடித்தாலும், “இப்படி முழு தொடையும் காட்டி உக்காந்துட்டு இருக்கீங்களே” என்று வியந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

45 வயதிலும் கவர்ச்சியில் குறையாத மாளவிகாவின் இந்த புகைப்படங்கள், இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

‘சந்திரமுகி’, ‘நான் அவன் இல்லை’ உள்ளிட்ட படங்களில் நடித்து, கேமியோ வேடங்களிலும் முத்திரை பதித்த மாளவிகா, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களால் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். 

இவரது சமீபத்திய பதிவுகள், 90களின் நினைவுகளை மீட்டெடுத்து, இளைஞர்களை மீண்டும் கவர்ந்து வருகின்றன.

English Summary : Actress Malavika, known for her role in Unnai Thedi (1999), has stirred the internet with her latest Instagram photos showcasing her stunning beauty. At 45, her glamorous poses have sparked mixed reactions, with fans both praising and playfully commenting on her bold style.