நம்முடைய தமிழகம் தளத்தில் நாள்தோறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்தும் அதன் பின்னால் இருக்கக்கூடிய திடுக்கிடும் பின்னணிகள் குறித்தும் பார்த்து வருகிறோம் அந்த வகையில் சினிமாவை மிஞ்சும் திருப்பங்கள் கொண்ட குற்ற சம்பவம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு சிறு கிராமத்தில், பக்கத்து வீட்டு இளைஞர்களான மீனாவுக்கும் சீனிவாசனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் அண்டை வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், பரஸ்பர புரிதலுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது.
நிச்சயதார்த்தத்திற்குப் பின், சீனிவாசன் மீனாவுடன் சினிமாவுக்கு செல்வது, கோயிலுக்கு செல்வது என நேரத்தை செலவிட்டார். ஆனால், திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தலைதூக்கியது.வாக்குவாதம் கைகலப்பாக மாற, திருமணம் நின்றுபோனது.
.jpg)
தீபாவளி காலத்தில் நடந்த இந்தச் சம்பவம் காவல் நிலையம் வரை சென்றது. இரு தரப்பும் புகார் அளித்து, "இனி பிரச்சினை செய்ய மாட்டோம்" என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்து வீடு திரும்பினர். இதன்பின், சீனிவாசன் மீனாவுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்தார். மீனாவும் இதை உறுதிப்படுத்தினார்.
13 மாதங்களுக்குப் பின் வந்த திருப்பம்
13 மாதங்கள் கழித்து, மீனா ஒரு குழந்தைக்குத் தாயானார். ஆனால், இங்கே தொடங்கியது பெரும் குழப்பம். மீனா, குழந்தையின் தந்தை சீனிவாசன் தான் என்று சத்தியம் செய்து கூறினார்.
.jpg)
ஆனால், சீனிவாசன் இதை மறுத்தார், கடந்த வருடம் தீபாவளி அன்றே நாங்கள் போலீஸ் ஸ்டேஷனில் பரஸ்பரம் பேசி எழுத்துப்பூர்வமாக உறுதி அழித்து பிரிந்து விட்டோம். அதற்க்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.
"நான் 13 மாதங்களாக மீனாவுடன் தொடர்பிலேயே இல்லை. நிச்சயதார்த்தத்திற்குப் பின் அவளுடன் சுற்றியது உண்மை, ஆனால் தனிமையில் இருந்ததில்லை," என்று உறுதியாகக் கூறினார். மீனாவும் இதை ஒப்புக்கொண்டார், ஆனால் குழந்தையின் தந்தை சீனிவாசன் தான் என்பதில் உறுதியாக இருந்தார்.
"சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியில் வெளிப்பட்ட உண்மைகள்
இந்த விவகாரம் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான "சொல்வதெல்லாம் உண்மை" அரங்கில் விவாதிக்கப்பட்டது. தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன், சீனிவாசனை வெளியேற்றிவிட்டு மீனாவிடம் கேள்விகளை எழுப்பினார்.

"13 மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் உங்களைப் பிரிந்தார். ஆனால், நீங்கள் கடந்த வாரம் தான் குழந்தை பெற்றிருக்கிறீர்கள். 13 மாதங்கள் கர்ப்பமாக இருந்தீர்களா?" என்று கேட்டார்.
மீனா தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். "எனது கர்ப்பத்திற்கு சீனிவாசன் தான் காரணம். வேறு யாருடனும் நான் உறவில் இருந்ததில்லை," என்று வாதிட்டார்.
ஆனால், விசாரணையில் வேறு உண்மைகள் வெளியாகின. மீனா வேலை செய்யும் இடத்தில் சதீஷ் என்ற இளைஞருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

ஒரு நாள், மீனாவின் தோழி சத்யா என்பவர் தன்னுடைய கைப்பேசியில் எதோ பிரச்சனை என்பதால் தன்னுடைய காதலன் சதீஷிற்கு மீனாவின் கைப்பேசியில் இருந்து தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன் மூலம், மீனாவின் கைப்பேசி என் சதீஷிற்கு கிடைத்துள்ளது.
அதன் பிறகு, மீனாவுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சதீஷ். மீனாவுடன் நெருக்கத்தை வளர்த்துள்ளார்.
சதீஷின் வாக்குமூலம்
சதீஷ், மீனாவை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அதன் பிறகு, மார்ச் மாதம் மீனாவின் வீட்டிற்கே சென்ற சதீஷ். அங்கே, அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
.jpg)
அதன் பிறகு, ஒரு வாரம் கழித்து மீண்டும் மீனாவின் வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த, உல்லாச பறவைகளின் உறவின் காரணமாக நவம்பரில் மீனாவுக்கு குழந்தை பிறந்தது.
ஆனால், சதீஷ், "மீனாவுடன் உறவில் இருந்தது உண்மை, ஆனால் குழந்தைக்கு நான் தந்தை இல்லை. மீனா பலருடன் தொடர்பில் இருந்திருக்கிறார்," என்று குற்றம்சாட்டினார்.
மீனாவோ, "சதீஷுடன் மட்டுமே உறவு கொண்டேன். அவர் தான் குழந்தையின் தந்தை," என்று உறுதியாகக் கூறினார். சதீஷ், டிஎன்ஏ பரிசோதனைக்குத் தயார் என்று கூறி, "இந்தக் குழந்தை என்னுடையது இல்லை. மீனா மோசமானவள்," என்று குற்றம் சாட்டினார்.
.jpg)
இந்த விவாதம் முடிவுக்கு வராமல், டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டதா என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை.
முடிவில்லாத குழப்பம்
காதல், மோதல், குற்றச்சாட்டு என சினிமாவை மிஞ்சிய திருப்பங்களுடன் மீனாவின் கதை பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்மையில் குழந்தையின் தந்தை யார்? மீனாவின் கூற்று உண்மையா, அல்லது சதீஷின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? இந்தக் கேள்விகள் பதிலில்லாமல், இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
Summary : Meena and Srinivasan, neighbors, got engaged but split after a dispute escalated to violence. Thirteen months later, Meena gave birth, claiming Srinivasan as the father. Investigations revealed Meena’s intimacy with Satheesh, who denies paternity, sparking a heated debate on a TV show without DNA test results.

