நாஷ்வில், டென்னசி (நவம்பர் 6, 2025): அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில், 30 வயதான பெண் ஆசிரியர் ஒருவர் தனது மாணவனிடம் வீடியோ கால் மூலம் பாலியல் அத்துமீறல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நடந்ததாகத் தெரிகிறது. பள்ளி மாணவனின் புகாரின் அடிப்படையில், காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஆசிரியர் கிரிஸ்டல் சிம்ஸ் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.

பேரன் கவுண்டி பள்ளியில் மாற்று ஆசிரியராகப் பணியாற்றிய சிம்ஸ், தனது மாணவர்களில் ஒருவருடன் ஸ்னாப்சாட் பயன்பாட்டு மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த மாணவனே சிம்ஸுக்கு ஸ்னாப்சாட் ரிக்வெஸ்ட்டை அனுப்பியதாகவும், அதன் பிறகு இருவரும் தொடர்ந்து சாட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தொடர்பு, உடலுறவுக்காக அழைப்பு விடுக்கும் வகையில் இருந்ததாக மாணவன் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டின்படி, சிம்ஸ் மாணவனுக்கு முதலில் ஆடியோ கால் செய்து, பின்னர் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது, வீட்டில் குளியறையில் இருந்த மாணவனுக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டி அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ கால் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், ஆடியோ கால் பதிவில் சிம்ஸ் உடலுறவுக்கு அழைக்கும் வகையில் பேசியதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், நாஷ்வில்லின் வடக்குப் பகுதியில் உள்ள கேவ் சிட்டியில் இருவரும் தனியாகச் சந்தித்து உடலுறவு மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை அறிந்த மாணவன், கடந்த செவ்வாய்கிழமை பேரன் கவுண்டி தலைமை காவலர் அலுவலகத்தில் புகார் அளித்தார். "ஆசிரியரின் செயல் என்னை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது எனது தனியுரிமையை மீறிய செயல்" என்று மாணவன் தெரிவித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புகாரின் அடிப்படையில், சிம்ஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பள்ளி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், சிம்ஸ் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக மறுத்துள்ளார். விசாரணையின்போது, "ஆடியோ காலில் பேசியது நான் தான். ஆனால், அது உடலுறவுக்காக அல்ல.
வகுப்பறையில் அவன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வைக்கவே அழைத்தேன். வீடியோ காலில் எந்த அத்துமீறலும் நடக்கவில்லை. உடல் ரீதியான நெருக்கமோ சந்திப்போ நடக்கவில்லை" என்று அவர் வாதிட்டார். இருப்பினும், காவல்துறை இந்த விஷயத்தில் ஆழமான விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
அமெரிக்காவில், பெண் ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் அத்துமீறல் தொடர்பான சம்பவங்கள் அவ்வப்போது வெளிப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில், பல்வேறு மாநிலங்களில் இத்தகைய வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது கல்வி நிறுவனங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த வழக்கின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary in English : In Tennessee, 30-year-old substitute teacher Crystal Sims faces allegations of sexually assaulting a student via video call on August 22, exposing her private parts while he showered. They chatted on Snapchat and planned a sexual meetup in Cave City. The shocked student reported to police last Tuesday; Sims denies intent, claiming it was to elicit an apology for classroom misconduct. No physical contact occurred; investigation continues.


