“வீட்டுக்கு ஒரு விலையில்லா EV ஸ்கூட்டர்” ஒரே சொருவாக சொருகிய கட்சி! பரபரப்பு தகவல்கள்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன.

இதில் "வீட்டுக்கு ஒரு விலையில்லா EV ஸ்கூட்டர்" என்ற தடாலடி திட்டம் குறித்து சமூக வலைதளங்களிலும், வாக்காளர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய தகவல்களின்படி, அ.தி.மு.க. (AIADMK) தனது தேர்தல் வாக்குறுதிகளில் "அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்" என்ற பெயரில் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்குவதை அறிவித்துள்ளது.

முதற்கட்ட அறிவிப்புகளில் 5 லட்சம் பெண்களுக்கு ரூ.25,000 மானியத்துடன் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சமீபத்திய விவாதங்களில் இலவச EV ஸ்கூட்டர் (மின்சார ஸ்கூட்டர்) என்று முழுமையாக இலவசமாக வழங்குவது குறித்து சாத்தியக்கூறுகளை விவாதித்து வருகின்றதாம்.

இது புதிய அறிவிப்பாக இருக்காது என்றும், அ.தி.மு.க.வின் மகளிர் நலன் சார்ந்த திட்டங்களின் விரிவாக்கமாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து தகவல்கள் வெளியானதும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. ஒருபுறம்,

  • "இலவசம் என்ற பெயரில் இன்னும் என்னென்ன கொடுமைகளைப் பார்க்க வேண்டியிருக்கிறதோ?" என்று வாக்காளர்கள் புலம்புகின்றனர்.
  • "வரி செலுத்தும் மக்களின் பணத்தை இப்படி தேர்தல் பரிசாக வீசுவது சரியா?" என்ற கேள்விகள் எழுகின்றன.
  • "மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு நல்லது தான், ஆனால் இலவசமாக எல்லாருக்கும் கொடுப்பது நிதி ரீதியாக சாத்தியமா?" என்ற விவாதங்கள் நடக்கின்றன.

மறுபுறம், சிலர் இதை வரவேற்கின்றனர். "பெண்களின் சுதந்திரத்துக்கும், போக்குவரத்து செலவு குறைப்புக்கும் உதவும்" என்று ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இதுவரை அதிகாரப்பூர்வமாக இலவச EV ஸ்கூட்டர் என்று எந்தக் கட்சியும் தெளிவாக அறிவிக்கவில்லை என்றாலும், அ.தி.மு.க.வின் "அம்மா இருசக்கர வாகனத் திட்டம்" EV-க்கு விரிவுபடுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மற்ற கட்சிகளான தி.மு.க., த.வெ.க. போன்றவை இதுவரை இதுபோன்ற இலவச EV ஸ்கூட்டர் திட்டத்தை அறிவிக்கவில்லை. ஆனால், தேர்தல் களம் கடுமையாக இருப்பாதால், தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற புதிய இலவசத் திட்டங்கள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாக்குறுதி தமிழக அரசியலில் இலவசப் பொருள் வழங்கல் (freebies) கலாச்சாரத்தை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. உச்ச நீதிமன்றமே இதுபோன்ற தேர்தல் இலவசங்களை விமர்சித்து வரும் நிலையில், வாக்காளர்கள் மத்தியில் "இன்னும் எத்தனை இலவசங்கள்?" என்ற கேள்வி எழுந்துள்ளது.

தவெக தலைவர் விஜய்யும் வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம் இருப்பதை உறுதி செய்வோம். கார் இருப்பதும் அவசியம் தான். ஆனால், இருசக்கர வாகனம் இருப்பதை கட்டாயம் உறுதி செய்வோம் என பேசியிருக்கிறார்.

மறுபக்கம், ஆட்சி மீது இருக்கும் எதிர்ப்பு அலையாலும், தவெகவின் வருகையாலும் 0.4% வாக்கு வங்கி வைத்துள்ள தேமுதிகவை கூட கூட்டணி வண்டியில் ஏற்றிக்கொண்டிருக்கும் திமுக என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

2026 தேர்தல் போட்டி நாளுக்கு நாள் கடுமையாகி வரும் நிலையில், இந்த EV ஸ்கூட்டர் வாக்குறுதி எந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக மாறும்? அல்லது வெறும் வதந்தியா? என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறது. வாக்காளர்கள் இதை எப்படி பார்க்கிறார்கள் என்பது வரும் நாட்களில் தெளிவாகும்.

Summary : In Tamil Nadu's approaching 2026 assembly elections, a major political party is reportedly planning to promise one free electric scooter per household. This bold freebie has sparked debates among voters about the rising trend of such schemes and their financial feasibility.