NDA கூட்டணியில் TVK உறுதி! முதுகில் குத்திய காங்கிரஸை கருவறுக்கும் வெறியில் விஜய்! ஒரு விரலை மடக்கிய EPS!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக - TVK) கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)-யில் இணைக்க ஆந்திர துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பவன் கல்யாண், விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு NDA கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தியதாகவும், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை பிரிப்பதால் பலன் ஆளும் கட்சிக்கு தான் என்று கூறியதாகவும், கடந்த ஒரு வார காலமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

விஜய் தனது நெருங்கிய ஆலோசகர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக தொகுதி பங்கீடு தாமதம்

இதனால், அதிமுக தரப்பில் தொகுதி பங்கீட்டு அறிவிப்பு தாமதமாகி வருகிறது. ஏற்கனவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விஜய் கூட்டணிக்கு வருகிறாரா என்பதை உறுதி செய்த பின்னரே அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்தில் டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) அமித்ஷாவை சந்தித்த பின்னர், "மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இது விஜய் தரப்புடனான பேச்சுகளையே குறிப்பதாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.

விஜயின் அறிவிப்புகள் & அதிமுகவின் அமைதி

நேற்று மகளிர் தின விழாவில் விஜய் அறிவித்த திட்டங்கள் – திருமணத்திற்கு தங்கம், இலவச சிலிண்டர் போன்றவை – அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை ஒத்திருப்பதால் கவனம் ஈர்த்துள்ளன.

ஆனால், அதிமுக பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் விஜய் அல்லது அவரது அறிவிப்புகள் குறித்து எவ்வித விமர்சனமும் வைக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் மீது விஜயின் கோபம்

மறுபுறம், காங்கிரஸ் கட்சி மீது விஜய் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் உள்ளன. கடைசி வரை கூட்டணி வைப்பதாக நம்பிக்கை கொடுத்து "முதுகில் குத்தியதாக" கருதுவதால், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது என்றும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது என்று சொல்லும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியை கருவறுக்கும் வெறியில் விஜய் தரப்பு கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. 

காங்கிரஸ் செய்த துரோகத்தால் திமுகவை விட காங்கிரஸை அதிகம் எதிரியாக பார்க்கிறார் என்றும் தகவல்கள் உள்ளன.

தொகுதி பங்கீடு பேச்சு & உறுதிப்படுத்தல்

தவெக சார்பில் 60-70 தொகுதிகள் கோரப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தையில் 50-க்கு இறங்கி வந்ததாகவும், இபிஎஸ் ஒரு விரலை மடக்கி 40 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.

NDA கூட்டணியில் தவெக இணைவது 70% உறுதியாகிவிட்டது என்றும், TVK கட்சியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை சமாளித்த பின்னர் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், தவெகவுக்குள் சிலர் இந்த கூட்டணியை கலைக்க முயல்வதாகவும், விஜய் அவர்களின் நோக்கத்தை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் உள்ளன.

மக்கள் கருத்து & விஜயின் நிலைப்பாடு

பல கருத்துக்கணிப்புகளில் NDA கூட்டணி "இயற்கையானது" என்று மக்கள் கருதுவதாகவும், விஜய் இணைந்தால் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

வாக்குகள் பிரியாமல் இருக்க தேர்தலுக்காக கூட்டணி என்றும், கொள்கையில் சமரசம் இல்லை என்றும் விஜய் அறிவித்தால் மக்கள் ஆத்மார்த்தமாக ஏற்பார்கள் என்று பல தனியார் நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலில் இந்த வளர்ச்சி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. விஜய் தனித்து போட்டியிடுவார் என்று முன்பு அறிவித்திருந்தாலும், தற்போதைய பேச்சுவார்த்தைகள் அவரது அரசியல் அணுகுமுறையை மாற்றியமைக்கும் சாத்தியத்தை காட்டுகின்றன.

மேலும் விவரங்கள் வெளியாகும் போது தமிழக தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NDA கூட்டணியில் TVK இணைந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே 2026தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும். தேர்தல் என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமே என்றும் NDA கூட்டணி 200 முதல் 220 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

பொறுத்திருந்து பார்ப்போம்.. என்ன நடக்கப்போகிறதென்று! 

Summary : Pawan Kalyan is reportedly in talks with Vijay to bring TVK into the NDA alliance for the Tamil Nadu elections. Discussions have been ongoing for a week. AIADMK is delaying seat-sharing announcements until TVK's decision is clear. Vijay is unhappy with Congress but open to NDA talks.