NDA வில் விஜய்..? சற்று முன் அண்ணாமலை சொன்ன வார்த்தை..!

சென்னை, மார்ச் 10 : தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை. என்டிஏ கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் (TVK) இணைந்து, 40 தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வந்த வதந்திகளுக்கு தீவிரமான பதிலடி கொடுத்துள்ளார்.

"தமிழக வெற்றி கழகத்துடன் எந்தவும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. கொள்கை முரண்பாடுகளால், காப்பியும் டீயும் சேர முடியாததுபோல, இவர்கள் ஒன்றாக பயணிக்க முடியாது" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK), அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளைப் பகிர்ந்துக்கொள்ளும் என்பது போன்ற தகவல்கள் ஊடகங்களில் பரவியது. இதற்கு முதலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

"அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை" என்று அவர் தெளிவுபடுத்தியிருந்தார். இருப்பினும், ஊடகங்கள் தங்கள் பரபரப்பான செய்திகளுக்காக யூகங்களை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து வெளியிட்டு வந்தன.இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலை இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

"மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் சொன்னது போலவே, தமிழக வெற்றி கழகத்துடன் பாஜக எந்தவித கூட்டணி பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. கொள்கை ரீதியான முரண்பாடுகள் உள்ள கட்சிகள் ஒன்றுசேர்வது என்பது முடியாத, பொருந்தாத காரியம்.

2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தற்போது இருக்கக்கூடிய NDA கூட்டணி நிச்சயம் பெறும். அதிமுக தலைமையிலான NDA கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், NDAவில் TVK என்பது போன்ற யூகங்களின் அடிப்படையிலான கேள்விகளுக்கு நான் தொடர்ந்து பதில் கொடுக்க விரும்பவில்லை" என்று அவர் விளக்கமளித்தார். காப்பி மற்றும் டீயின் உவமையைப் பயன்படுத்தி, இரு கட்சிகளுக்கும் இடையேயான கொள்கை வேறுபாடுகளை அவர் சித்தரித்தார்.

அண்ணாமலையின் இந்தப் பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. TVK தனித்துப் போட்டியிடும் என விஜய் அறிவித்திருந்த நிலையில், இந்த வதந்திகள் ஏன் பரவினது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர்கள் விவாதிக்கின்றனர்.

சிலர் இது திமுகவிற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கும் உத்தியாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர், மற்றவர்கள் சில ஊடகங்களின் அரசியல் சார்பினால் ஏற்பட்டது என்கின்றனர்.

பாஜகவின் தமிழக உத்தி 2026 தேர்தலில் முக்கியமானது என்பதை அண்ணாமலையின் அறிக்கை மீண்டும் உணர்த்துகிறது.

TVK-வின் தனித்துப் போட்டி அறிவிப்பு, அதிமுக-பாஜக கூட்டணியின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பது குறித்து இன்னும் விவாதங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary : BJP state president Annamalai clarified that no alliance talks have taken place with Tamilaga Vettri Kazhagam (TVK). He stated that due to ideological differences, BJP and TVK cannot join hands, comparing it to coffee and tea that never mix. He dismissed ongoing media speculations as baseless.