சென்னை: 2009-ம் ஆண்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படத்தில் ஜீவாவின் தங்கை கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சினேகா முரளி.
திருமணத்துக்குப் பிறகும் தன் உடல்நிலையை ஃபிட்டாக வைத்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இது ரசிகர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி, சகிலா உள்ளிட்டோர் நடித்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் ஜீவாவை ஊர்வசியுடன் சேர்த்து ‘செம ஓட்டு ஓட்டும்’ தங்கச்சியாக சினேகா முரளி நடித்திருந்தார்.
அந்தப் படத்துக்கு முன்பு அட்லி இயக்கிய ஒரு குறும்படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பின்னர் சினிமாவுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

ஆனால், திருமணத்துக்குப் பிறகும் தன் உடலை ஃபிட்டாக வைத்துக் கொண்டு பிகினி உடைகளில் கவர்ச்சி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிடும் சினேகா முரளி, ரசிகர்களுடன் இன்னும் செம கனெக்ட்டில் இருந்து வருகிறார்.

விஜய், ஜீவா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுக்கு தங்கை வேடத்தில் நடித்த பல நடிகைகள் ரசிகர்களின் ‘கிரஷ்’ ஆக மாறியதைப் போலவே, சினேகா முரளியும் இன்றும் தன் கவர்ச்சியால் இளம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இதே நேரத்தில், பல டாப் நடிகைகள் திருமணத்துக்குப் பிறகு உடல் பருமனாகி ட்ரோல் ஆன நிலையில், சினேகா முரளி தன் ஃபிட்னஸை தக்க வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘கடல்’ பட நடிகை துளசி நாயர், ஜோதிகா உள்ளிட்டோர் திருமணத்துக்குப் பிறகு ஃபிட்னஸை சற்று தளர்த்திய நிலையில், ஜோதிகா மீண்டும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு சூர்யாவை விட பல மடங்கு ஃபிட்டாக மாறியதைப் போலவே, சினேகா முரளியும் திருமணத்துக்குப் பிறகும் தன் கவர்ச்சியை இழக்காமல் இருப்பது பலருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.

தற்போது இந்தி சீரியல்களில் வயதான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ‘சிவா மனசுல சக்தி’ ஹீரோயின் அனுயா போலல்லாமல், சினேகா முரளி தன் சொந்த ஸ்டைலில் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

திருமணமான பெண்கள் ஃபிட்டாக இருக்கக் கூடாதா என்பதற்கு சினேகா முரளியே சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.


