“ஜிம்மில் உடலுறவு.. வீட்டில் கசிந்த ரத்தம்..” என் கண் முன் அது.. பிளேட்டை மாத்திய கொடூர மனைவி!

சண்டிகர் : 2021 டிசம்பர் 15. ஹரியானா பனிபத் நகரம் அமைதியாக இருந்தது. வியாபாரி வினோத் பாராரா தன் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கியைப் பிடித்தவன் டிரக் டிரைவர் தேவ் சுனார்.

காரணம்? ஒரு விபத்து வழக்கில் கோர்ட்டுக்கு வெளியே தீர்வுக்கு வர வினோத் மறுத்ததாம். எனவே, கொலையாளி தேவ் சுனார் சிறையில் அடைக்கப்பட்டான், வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

மூன்று ஆண்டுகள் கழித்து...

ஒரு வாட்ஸ்ஆப் செய்தி மட்டும் போதும்!

மாவட்ட போலீஸ் தலைவர், ஐபிஎஸ் அதிகாரி அஜித் சிங் ஷெகாவத் தன் போனைப் பார்த்தார்.

அந்நிய எண்ணில் இருந்து வந்த செய்தி: “சார், என் சகோதரர் வினோத் பாராராவின் கொலையை மீண்டும் விசாரியுங்கள். அவருக்கு மிக நெருக்கமான ஒருவர் பின்னால் இருக்கிறார்!” அனுப்பியவர் வினோதின் சகோதரர் பிரமோத் – ஆஸ்திரேலியாவில் இருந்து.அதிகாரியின் கண்கள் கூர்மையடைந்தன.

அந்த கேஸ் ஃபைலை கொண்டு வாங்க.. என்ற சத்தம்.. அடுத்த சில நிமிடங்களில் அவரது டேபிளில் வந்து விழுந்தது அந்த ஃபைல் “வெறும் விபத்து வழக்குக்காக யாரவது கொலை பண்ணுவாங்களா? ராஷ் டிரைவிங் கேஸ்ல ஈஸியா ஜாமீன் வாங்கிடலாம்.

ஆனா, கொலை வழக்குல ஜாமீன் கிடைப்பது கடினம்.. தூக்கு வரை தண்டனை வரை கூட செல்லும் வாய்ப்பு உள்ளது.. ஏதோ தவறு இருக்கிறது,” என்று உணர்ந்தார்.

முதல் திருப்பம்: குளிர்ந்த வழக்கில் புதிய உயிர்

கேசை மீண்டும் திறந்தார். ஹரியானா சிஐஏ அதிகாரி தீபக் குமாரிடம் ஒப்படைத்தார். விசாரணை ஆழமாகச் சென்றது. தேவ் சுனார் ட்ரைவர் மட்டுமல்ல.. அவர் ஒரு ஜிம் ட்ரெய்னர். சுமித்துக்கு நெருக்கமானவன் என்பது தெரியவந்தது. அந்த சுமித்... வினோத் பாராராவின் மனைவி நிதி பாராராவுக்கு மிக நெருக்கமானவன்!

இரண்டாவது திருப்பம்: ஜிம்மில் தொடங்கிய காதல், வீட்டில் தொடங்கிய சண்டை

நிதி பாராரா ஜிம்முக்கு செல்லும் பெண். அங்கு சுமித்தைச் சந்தித்தாள். நட்பு... பின்னர் காதலாக மாறியது. சீண்டல்கள், தொடுதல்கள் என உறவு வளர்ந்து.. இருவரும் உடலுறவு கொள்ளும் நிலைக்கு சென்றனர்..

வினோதுக்கு சந்தேகம் வந்தது. மனைவியை எதிர்த்தார். வீட்டில் அடிக்கடி சண்டை. சுமித்தையும் நேரில் எச்சரித்தார்: “என் மனைவியை நெருங்காதே!”ஆனால் காதல் புயல் அடங்கவில்லை. இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர் – வினோத் இருந்தால் தான் தடை!

மூன்றாவது திருப்பம்: முதல் கொலை முயற்சி தோல்வி

2021 ஜனவரி 5. ஒரு பிக்-அப் வேன் ஏற்பாடு செய்தனர். தேவ் சுனாரை அழைத்தனர். “ரூ.10 லட்சம் தருகிறோம். வினோத்தின் காரை மோதி விடு.”வினோத் காரில் மோதினான்.

வினோத் படுகாயமடைந்தார். ஆனால் உயிர் தப்பினார்!நிதியும் சுமித்தும் ஏமாற்றமடைந்தனர். உன்னை கொலை பண்ண சொன்னா என்ன பண்ணி வச்சிருக்க.. அவன் தப்பிச்சிட்டான்.. நீ தான் முடிக்கணும்.. இல்லனா வாங்குன பணத்தை திருப்பி குடு.. வேற ஆள் பாத்துக்குறோம்..

தேவ் சுனார் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்து.. பிளான் B-யை அமல்படுத்த ஆரம்பித்தான்.

நான்காவது திருப்பம்: வீட்டுக்குள் நுழைந்த மரணம்

டிசம்பர் 15, 2021. தேவ் சுனார் வினோத் வீட்டுக்கு வந்தான். “விபத்து வழக்கை தீர்த்துக் கொள்ளுங்கள்” என்றான். வினோத் மறுத்தார். அடுத்த நொடி... துப்பாக்கி சத்தம்! வினோத் இறந்தார்.

கொலை முடிந்த பிறகு இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடந்தது... வழக்கமான நாட்கள் திரும்பியது. வினோத் மனைவி நிதியும் சுமித்தும் மணாலிக்கு ரொமான்டிக் டிரிப் போனார்கள்! வினோதின் குழந்தைகளை ஆஸ்திரேலியாவில் உள்ள மாமாவிடம் அனுப்பி வைத்தாள் நிதி.

இறுதி திருப்பம்: காப்பீட்டுப் பணத்தில் கொலையாளிக்கு உதவி

விசாரணையில் பெரிய அதிர்ச்சி! வினோத் இறந்த பிறகு கிடைத்த காப்பீட்டுப் பணத்தில் இருந்து தேவ் சுனாரின் வழக்கு செலவு, சட்ட உதவி அனைத்தையும் நிதிதான் செலுத்தி வந்தாள்.

மேலும், கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த மனைவி. பிரள் சாட்சியாக மாறி பின்வாங்கினாள் – வழக்கை பலவீனப்படுத்த!எல்லலா புள்ளிகளும் ஒன்றிணைந்தன. போலீசார் நிதி பாராரா மற்றும் சுமித்தை கைது செய்தனர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

தேவ் சுனாரும் மீண்டும் சிறையில்.ஒரு குடும்பத்தின் முகமூடி கிழிந்தது. காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி, ஜிம் ட்ரெய்னர் காதலன், டிரக் டிரைவர் கொலையாளி... மூவரும் இப்போது சிறையில்.காதல் என்ற பெயரில் நிகழ்ந்த மிகக் கொடூரமான துரோகம்!

அந்த ஒரே ஒரு வாட்ஸ்ஆப் செய்தி இல்லையென்றால் இந்த உண்மை என்றும் வெளியாகியிருக்காது. நீதி தாமதமானாலும், தவறுவதில்லை.

Summary in English : Three years after a businessman died in Panipat, a message from his brother in Australia prompted police to reopen the case. Investigation showed his wife had close ties with a gym trainer, who arranged help from a truck driver. The driver first caused an accident and later visited the home. Police arrested the wife and trainer after they admitted their roles.