இந்த மாதிரி பெயர் கொண்ட நபர்களுக்கு `No' பாஸ்போர்ட் - ரெண்டு டைம் நல்லா யோசிச்சி வைங்க

லண்டன் : பிரபல அமெரிக்க டிவி சீரியல் கேம் ஆஃப் த்ரோன்ஸ்-ல் வரும் 'கலீசி' (Khaleesi) கதாபாத்திரத்தின் பெயரை தன் மகளுக்கு சூட்டிய தாய் ஒருவர், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த லூசி என்ற பெண் தன் மகளுக்கு கலீசி என்று பெயர் வைத்திருந்தார். 'அரியணைக்காகப் போராடும் வலிமையான பெண் கதாபாத்திரம்' என்று அந்தப் பெயரை விரும்பி வைத்ததாக அவர் தெரிவித்தார். சிறுமிக்கு தற்போது 6 வயது ஆகிறது.

 

பாரிஸ் பயணத்துக்காக மகளின் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்தபோது, பாஸ்போர்ட் அலுவலகம் அதிர்ச்சி தரும் பதிலை அளித்துள்ளது.

"கலீசி" என்ற பெயர் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் உரிமம் பெறப்பட்ட டிரேட்மார்க் என்பதால், அந்தப் பெயரைப் பயன்படுத்த உரிய அனுமதி தேவை என்று தெரிவிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதிக் கடிதத்துடன் மீண்டும் வருமாறு அதிகாரிகள் கூறியதாக லூசி தெரிவித்தார்.

இதுகுறித்து லூசி இணையத்தில் கேள்வி எழுப்பினார்:"குழந்தைக்கு பெயர் சூட்டும் போதோ, பிறப்புச் சான்றிதழ் வாங்கும் போதோ இந்தத் தகவலை ஏன் யாரும் சொல்லவில்லை? இப்போது பாஸ்போர்ட் வேண்டிய நேரத்தில் மட்டும் இப்படி சொல்கிறார்கள்?"

இந்தப் பதிவு வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் "பெயர் வைக்கும் உரிமை கூட டிரேட்மார்க் ஆகிவிட்டதா?" என்று கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் லூசியை தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

கலீசி பாஸ்போர்ட் பெற்று பாரிஸ் செல்ல முடியுமா? என்பது இப்போது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தச் சம்பவம், பிரபல டிவி சீரியல்கள், வெப் சீரியல்களில் வரும் கதாபாத்திரப் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது.

Summary : A woman in London named her six-year-old daughter Khaleesi after a character from the television series Game of Thrones. When she applied for her daughter's passport for a trip to Paris, officials noted the name is trademarked and requested permission from the production company. The matter is now being addressed.