சென்னை : பிரபல சீரியல் நடிகை ஹரிப்பிரியா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் காதல் மற்றும் மரியாதை பற்றிய தனது ஆழமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது தான் உண்மையான மரியாதை என்று வலியுறுத்திய அவர், பழைய தலைமுறை கருத்துக்களில் இருந்து இன்றைய சமூக மாற்றத்தையும் சுட்டிக்காட்டினார்.
பேட்டியில் ஹரிப்பிரியா கூறியதாவது: “காதலில் மரியாதை என்பது மிகவும் முக்கியமானது. மரியாதை இல்லாத காதல் காதலை அல்ல. இங்கே நான் மரியாதை என்று குறிப்பிடுவது கார் கதவை திறந்து விடுவது, கூடை பிடித்து நடந்து வருவது, ‘செல்லமே’, ‘தங்கமே’ என அழைப்பது இல்லை. என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். இதைத்தான் நான் மரியாதை என்று கூறுகிறேன்.”

மேலும் அவர் பேசுகையில், “ஒன்றைய தலைமுறையில் பெண்களுக்கு மரியாதை என்று ஒன்று அவசியமே இல்லை, அது அசிங்கமானது என்றெல்லாம் கருத்துக்கள் இருந்தன.
கணவனை எதிர்த்து பேசுவது, கணவன் அல்லது காதலன் எதை செய்தாலும் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். அதை எதிர்த்து பேசுபவர்கள் அசிங்கமான பெண் என்றெல்லாம் கருத்துக்கள் இருந்தன. ஆனால் இப்போது அது எவ்வளவோ மாறி இருக்கிறது” என்றார்.
காதல் பற்றி விளக்கிய ஹரிப்பிரியா, “காதல் என்பது வெளி தோற்றத்தால் வரக்கூடியது அல்ல. உள்ளே அவர்கள் எப்படியான மனிதர்களாக இருக்கிறார்கள், எப்படி அவர்கள் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள் என்பது தான் அவர்களுடைய காதல் அடங்கி இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நடிகையின் இந்த கருத்துக்கள் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பெண்களின் சுயமரியாதை மற்றும் உறவுகளில் சமத்துவம் பற்றிய விவாதங்களை இது மேலும் தூண்டியுள்ளது.
ஹரிப்பிரியா தனது சீரியல் பணிகளுக்காகவும், பெண் சக்தியை வெளிப்படுத்தும் கருத்துக்களுக்காகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்.
Summary in English : Serial actress Haripriya, in a recent interview, emphasized that respect is crucial in love. True respect means valuing each other's feelings, not just superficial gestures. She noted how societal views on women's respect have evolved from previous generations and stressed that love stems from inner character and mutual respect rather than appearances.