கணவர் இதை செய்தால்.. தனிமையில் இருக்கும் போது துர்நாற்றம் அடிக்கும்.. நடிகை பூர்ணா வேதனை!

நடிகை ஷாம்னா காசிம் (பூர்ணா) சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் தன் கணவர் ஷானுவை (ஷானு) முதன்முதலில் ப்ரபோஸ் செய்ததாக ஷாம்னா கூறினார்.

“நான் ஒரு நடிகை என்பது அவருக்கு தெரியாது. சினிமாவுடன் பெரிய அளவில் தொடர்பில்லாதவர். எங்கள் நிச்சயதார்த்தத்தின்போது தான் அவரது பிறந்தநாள். அப்போது எடுத்த புகைப்படத்தை நான் போட்டபோது தான் அவர் என்னைப் பற்றி முழுமையாக அறிந்தார்” என்று லவ் ஸ்டோரியை நினைவுகூர்ந்தார்.

“சிகரெட் பழக்கம் தான் பிடிக்காது”

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறிய ஷாம்னா, கணவரின் ஒரு பழக்கத்தை மட்டும் விரும்பவில்லை என்று தெரிவித்தார். “கணவர் நல்லா ஸ்மோக் பண்ணுவார். 

எனக்கு அது இஷ்டமில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் அடிக்கடி சண்டை போடுவோம்” என்றார்.மேலும், “எட்டாவது மாடியில் இருந்து எத்தனையோ முறை சிகரெட்டுகளை தூக்கி கீழே வீசி எறிந்திருக்கிறேன். 

அவர், எங்கெல்லாம் மறைத்து வைக்கிறார் என்பது எனக்குத் தெரியும். வீட்டில் சிறு சிறு சந்துகளில் மறைத்து வைத்திருப்பார். அதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு வேதனையாக இருக்கும்.

சில சமயம் ‘நான் ஸ்மோக்கிங் நிறுத்திவிட்டேன்’ என்று சொல்வார். ஆனால், நான் தனிமையில் இருக்கும் அவர் பத்தடி தூரத்தில் வரும் போது சிகரெட் துர்நாற்றம் வந்தால் எனக்கு ரொம்ப கோபம் வரும்” என்று வேடிக்கையாகவும், உண்மையாகவும் பகிர்ந்துகொண்டார்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி

மகள் ஹம்தான் பிறந்த பிறகு வாழ்க்கையை அதிகம் அனுபவிப்பதாக ஷாம்னா கூறினார். பிரசவத்தின் வலியை மறக்கும் அளவுக்கு மகிழ்ச்சி என்றும், இன்னொரு குழந்தை பற்றி யோசிப்பதாகவும் தெரிவித்தார்.

கணவருடன் உள்ள உறவில் சின்ன சின்ன விஷயங்களை (ஐ லவ் யூ சொல்லாதது போன்றவை) ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஷாம்னா காசிம் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். நடிப்புடன் கூடவே கிளாசிக்கல் டான்ஸராகவும் அறியப்படுபவர்.

இந்த பேட்டி ரசிகர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமண வாழ்க்கையில் உள்ள சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாகப் பகிரும் நடிகையின் அணுகுமுறை பலருக்கும் பிடித்திருக்கிறது.

Summary in English : Actress Shamna Kasim shared in an interview that she dislikes her husband’s smoking habit. She mentioned throwing cigarettes from the eighth floor and noticing the smell even when he claims to have quit. She also spoke about their love story, marriage, and life after becoming a mother.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!