DC படத்தை சேலத்தில் வெளியிட மாட்டோம்! சேலம் திரையங்குகள் கூட்டமைப்பு அறிவிப்பு! இது தான் காரணம்!

சேலம் மல்டிபிளக்ஸ் குழுமம் இந்த வாரம் வெளியாகும் தமிழ் திரைப்படமான ‘DC’-ஐ திரையிடாது என அறிவித்துள்ளது.

வணிக நிபந்தனைகள் தொடர்பாக விநியோகஸ்தருடன் பரஸ்பர உடன்பாடு எட்ட முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குழுமம் தெரிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் சார்பாகப் பேசுவதாகக் கூறும் திரு. நரேஷ், சேலம் மல்டிபிளக்ஸ் குழுமத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற பகுதிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட அதே நிபந்தனைகளே இங்கும் முன்வைக்கப்பட்ட போதிலும் உடன்பாடு ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

சேலம் மல்டிபிளக்ஸ் - கிராண்ட், லட்சுமி, டிஎன்சி, எஸ்பிஆர், ஆஸ்கர், ஏஆர்ஆர்எஸ், திவ்யம், அக்ஷயா உள்ளிட்ட தொடர்புடைய திரையரங்குகளில் ‘DC’ திரையிடப்படாது. இந்த முடிவால் ஏற்படும் சிரமத்திற்கு குழுமம் வருத்தம் தெரிவித்துள்ளது.

நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்த சில கடினமான முடிவுகள் தேவை எனவும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க தொடர்ந்து முயற்சிப்பதாகவும் சேலம் மல்டிபிளக்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

Summary in English : Salem Multiplexes Group has announced that its theatres including Grand, Lakshmi, DNC, SPR, Aascar, ARRS, Dhivyam and Akshaya will not screen the Tamil film DC this week. The decision follows inability to reach mutual agreement on commercial terms with the distributor. The group expressed regret for any inconvenience and appreciated patrons’ continued support.
------Advertisement------
------Advertisement------