சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம், நட்பு, நம்பிக்கை, ரகசியம், மிரட்டல் என பல முகங்களை வெளிப்படுத்திய ஒரு அதிர்ச்சிகரமான கிரைம் கதை. பெயர்கள் கற்பனையானவை.
நான்கு மாதங்களுக்கு முன் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு நகரத்தில் நடந்த ஒரு சாலை விபத்து, அப்போது வெறும் விபத்தாகவே பார்க்கப்பட்டது. காவல்துறை வழக்கை முடித்து வைத்தது. ஆனால் அந்த விபத்துக்குப் பின்னால் மறைந்திருந்த உண்மை, இப்போது வெளிவந்ததும் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

நண்பனின் மனைவியை மிரட்டி தன் வசப்படுத்தின ஒரு நபர், நான்கு மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட ஒரு ரகசியத்தை மீண்டும் வெளிக்கொண்டு வந்தார். அந்த ரகசியம் தான், ஒரு மனிதனின் உயிரை பறித்த திட்டமிட்ட செயல்.
துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் சாஹுவுக்கும், அவருடைய மனைவி சுனிதாவும் தங்களுடைய குழந்தைகளுடன் அமைதியாக குடும்பம் நடத்தி வந்தனர்.
சுனிதா மிகவும் அழகானவள், சினிமா நடிகை போல எப்போதும் மேக்கப் கலந்த முகத்துடன் அழகாக தோன்றுவார். வெளியே நடந்து சென்றால் ஆண்களின் கண்கள் சுனிதாவின் மீதுதான் இருக்கும். 46 வயதிலும் 30 வயது பெண் போல வாட்ட சாட்டமான தோற்றம்.
கணவன் மனோஜின் நெருங்கிய நண்பர், ராஜேஷ் அடிக்கடி வீட்டுக்கு வருவார். மனோஜ் வேலைக்குச் செல்லும் நேரங்களில் கூட அவர் வீட்டில் இருப்பார் என்பது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக ராஜேஷ் அடிக்கடி “எங்கே இருக்கிறாய்? எப்போது வீட்டுக்கு வருவாய்?” என்று கேட்கத் தொடங்கினார். மனோஜ்ஷுக்கு உள்ளூர ஒரு சந்தேகம் எழுந்தது.
அக்கம்பக்கத்தினர் சிலர் சொன்ன சிறிய தகவல்களும் அவருடைய காதுகளை எட்டின. மனைவி சுனிதாவின் நடத்தையில் மாற்றம் தெரிந்தது. ஒருநாள் மனோஜ், சுனிதாவின் கைபேசியைப் பார்த்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டன.
சுனிதாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒருவருடன் தகாத தொடர்பு இருந்திருக்கிறது. அந்த நபர் வேறு யாருமல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் எதிர் வீட்டிற்கு குடிவந்த விக்ரம் யாதவ் தான்.
விக்ரம் யாதவ் சுனிதாவின் முன்னாள் காதலன். சமூக வலைதளங்களில் அவ்வப்போது பேசுவது வழக்கம். இந்நிலையில், தன்னுடைய வீட்டின் எதிர்வீடு வாடகைக்கு உள்ளது. நீ உன் குடும்பத்துடன் இங்கே வந்து தங்கு. நானும் நீயும் அவ்வப்போது உல்லாசமாகவும் இருக்கலாம் என யோசனை கொடுத்தால் சுனிதா.
இப்படி, மனைவி சுனிதா தான் விக்ரமை எதிர் வீட்டில் தங்க வைக்க வழி செய்திருக்கிறாள் என்பதும் தெரிந்தது. “நீ அங்கே குடியிருந்தால் நான் இங்கே இருப்பேன். அவ்வப்போது சந்திக்கலாம்” என்ற யோசனை சுனிதாவிடமிருந்து வந்திருக்கிறது.
முன்னாள் காதலன், விக்ரம் யாதவ் ஒரு கட்டத்தில் சுனிதாவை நெருக்கினார். “உன் கணவரை விட்டு விலகு. நான் என் குடும்பத்தை விட்டு வருகிறேன். இருவரும் புதிய வாழ்க்கை வாழலாம். இப்படித் திருட்டுத்தனமாக சந்திப்பது எனக்குப் பிடிக்கவில்லை” என்று வற்புறுத்தினார். தனிமையில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டவும் தொடங்கினார்.
பயந்துபோன சுனிதா, தன்னுடைய கணவரான மனோஜ்ஷின் நண்பன் ராஜேஷ்ஷிடம் உதவி கேட்டாள். ராஜேஷ் ஆரம்பத்தில் அனுதாபத்துடன் பேசினார். “உங்களின் வேதனை எனக்குப் புரிகிறது. அந்த நபரை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார். ஆனால் அவர் சொன்ன “பார்த்துக்கொள்வது” என்பது வேறு விதமாக அமைந்தது.
நான்கு மாதங்களுக்கு முன், விக்ரம் யாதவ் சாலையில் ஒரு காரில் மோதப்பட்டு உயிரிழந்தார். விபத்து போலத் தோன்றியது. காரை ஓட்டி வந்த அனில் குமார் உடனே காவல் நிலையத்தில் காரை ஒப்படைத்து, “அவர் திடீரென குறுக்கே வந்துவிட்டார். தெரியாமல் மோதிவிட்டேன்” என்று வாக்குமூலம் அளித்தார்.
விக்ரமின் மனைவி மற்றும் பெற்றோர் சந்தேகம் தெரிவித்து புகார் கொடுத்தும், போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கு முடக்கப்பட்டது. காவல்துறை அதை தற்செயலான விபத்தாகவே பார்த்தது.
உண்மையில் அந்த விபத்து தற்செயலானது அல்ல. ராஜேஷ் ஏற்பாடு செய்த ஒருவன் மூலம் காரை வேகமாக மோதச் செய்து, விபத்து போல நாடகம் நடத்தியிருக்கிறார்கள். சுனிதாவும் இந்தத் திட்டத்தில் பங்கு வகித்திருக்கிறாள்.
விக்ரம் இறந்த பிறகு தான் ராஜேஷ்ஷின் உண்மையான நோக்கம் வெளிப்பட்டது. “உன்னோட ரகசியம் எல்லாம் எனக்குத் தெரிந்துவிட்டது. நீ என்கிட்டே பேசிய ஆடியோ எல்லாம் இருக்கு, விக்ரம் மரணத்துக்கு திட்டம் போட்டதே நீ தான், இப்போ நான் நினைத்தால் நீ சிறைக்குப் போகலாம். நானும் சிறைக்கு போவேன். அதைப்பற்றி எனக்கு கவலைப்படவில்லை. நீ என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் அவ்வளவு தான். விக்ரம் போல திருமணம் செய்துகொள் என மிரட்ட மாட்டேன். ஆனால், நான் நினைக்கும் போதெல்லாம் நீ என்னுடன் உல்லாசமா இருக்கணும், புரியுதா.." என மிரட்டி, நான்கு மாதமாக சுனிதாவை வசப்படுத்தி வந்திருக்கிறார்.
கணவர் மனோஜ் கைபேசியில் உள்ள தகவல்களைத் தொடர்ந்து ஆராய்ந்தபோது, இந்த முழு சங்கிலியும் வெளிப்பட்டது. நான்கு மாதங்களுக்கு முன் முடக்கப்பட்ட விபத்து வழக்கு மீண்டும் திறக்கப்பட்டது. காவல்துறை புதிய ஆதாரங்களைச் சேகரித்தது.
விசாரணையில் சுனிதா, ராஜேஷ் தேவங்கன், காரை மோதச் செய்த அனில் குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு ஒருவரைக் கொன்ற வழக்கு இப்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கர் காவல்துறை இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. நட்பு என்ற பெயரில் நம்பிக்கையைக் காட்டி, ரகசியத்தை வைத்து மிரட்டி, இறுதியில் ஒரு உயிரையும் பறித்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. ரகசியம் ஒரு ஆயுதமாக மாறும்போது, அது பல உயிர்களையும் குடும்பங்களையும் சிதைக்கும். நான்கு மாதங்களுக்கு முன் “விபத்து” என்று முடிவுக்கு வந்த ஒரு நிகழ்வு, இப்போது திட்டமிட்ட குற்றமாக வெளிப்பட்டது. மூன்று பேர் சிறையில் உள்ளனர். வழக்கு நீதிமன்றத்தில் தொடர்கிறது.
நட்பு, குடும்பம், நம்பிக்கை ஆகியவை எளிதில் உடைந்துபோகும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.
Summary in English : A man in Chhattisgarh used a hidden secret to pressure his friend’s wife into a forbidden relationship for four months. The husband later found phone records of her two-year link with a neighbor living opposite their house. A road crash from four months earlier was reopened. Three people were arrested.