திமுக கூட்டணியின் சிறுபான்மையினர் ஓட்டுக்கு வேட்டு வைத்த லேடி துரந்தர்! இன்று என்ன பேசியுள்ளார் பாருங்க!
சேலம், ஏப்ரல் 18 : தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டணி கட்சியான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக ஆட்சியை நேரடியாக விமர்சித்துப் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே அவர், “எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் இருக்கிறது. இதைத் தவிர அண்ணன் ஸ்டாலின் மீது வேறு என்ன குற்றச்சாட்டு சொல்ல முடியும்?” என்று கூறினார். இந்தப் பேச்சு திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பூங்காவில் இருந்து சேலம் கோட்டை மைதானம் வரை நடைபயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மக்களிடம் வாக்கு சேகரித்த பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசினார். “தமிழகம் முழுவதும் ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் அண்ணன் மீது இருக்கிறது. அது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் போதைப் பொருள் கலாச்சாரம்” என அவர் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தக் கூட்டத்தில் கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களும் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சிகள் ...