Posts

Showing posts with the label Snakebite

2 முறை பாம்பு தீண்டியும் பைக் தம்பி தப்பியது எப்படி? ஐடி ஊழியர் பலியானது ஏன்? வீட்டில் இதை பண்ணாதிங்க..

Image
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்த இரண்டு பாம்பு கடி சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. முதல் சம்பவம் கிட்டகனூர் பகுதியில் நிகழ்ந்தது. வீட்டு வாசலில் குட்டி நாகப்பாம்பு ஒன்று அசைவற்று படுத்திருந்தது. அப்போது பைக்கில் வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர், பாம்பு இருப்பதை கவனிக்காமல் அதன் மீது பைக் ஏற்றியுள்ளார். வலியால் துடித்த பாம்பு முதலில் தீண்ட முயன்று தோல்வியடைந்தது. ஆனால், பைக்கை பின்னோக்கி திருப்பியபோது இளைஞரின் கால் பாம்புக்கு அருகில் சென்றபோது, இரண்டாவது முயற்சியில் பாம்பு அவரைக் கடித்தது. அதிர்ஷ்டவசமாக, கடி காலில் படாமல் காலணியில் பட்டதால் இளைஞர் உயிர் தப்பினார். பயத்தில் பைக்கை கீழே போட்டுவிட்டு அவர் ஓடிய காட்சிகள், சிசிடிவியில் பதிவாகி, சினிமாவை மிஞ்சும் வகையில் பதைபதைப்பை ஏற்படுத்தியது. இரண்டாவது சம்பவம் பெங்களூருவின் பன்னர்கட்டா பகுதியில் நடந்துள்ளது. 41 வயதான ஐடி ஊழியர் மஞ்சு பிரகாஷ், குடும்பத்துடன் வசித்து வந்தவர், கடைவீதிக்கு செல்வதற்காக ஷூ அணிந்து சென்றார். வீடு திரும்பிய சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி உயிரிழந்தார். ஷூவிற்கு வெளியே கட்டுவிரியன் பாம்ப...