Posts

Showing posts with the label Surjith

அவன் SC என்பதால்.. எனக்கும் கவினுக்கும் என்ன தொடர்பு.. காதலி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..

Image
திருநெல்வேலி மாவட்டத்தில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. கவின், சுபாஷினி என்ற பெண்ணை காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கவின் பட்டியல் இனத்தைச் (SC) சேர்ந்தவர் என்பதால், சுபாஷினியின் குடும்பத்தினர் (MBC) காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஜூலை 27, 2025 அன்று சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் (23) கவினை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். சுர்ஜித் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டார். சுர்ஜித்தின் தந்தை சரவணன், தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சுபாஷினியின் தாய் கிருஷ்ணகுமாரியும் விசாரணையில் உள்ளார். இந்நிலையில், சுபாஷினி வெளியிட்ட வீடியோவில், “நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். ஆனால், திருமணத்திற்கு இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என கவின் கேட்டிருந்தார். மே 30 அன்று சுர்ஜித், கவினிடம் பேசியபோது, நான் காதலிக்கவில்லை என மறுத்தேன், ஏனெனில் கவின் நேரம் கேட்டிருந்தார். ஜூலை 27 அன்று கவின், தாத்தாவின் உடல்நலம் கு...

நெல்லை IT ஊழியர் படுகொலையில் எதிர்பாராத திருப்பம்.. காதலியையும் கைது செய்ய..

Image
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நான்கு படுகொலைச் சம்பவங்கள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை, மதுரை, ஈரோடு, மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில், நெல்லை மாநகர் கே.டி.சி. நகர் அஷ்டலட்சுமி தெருவில் நடந்த ஆணவக் கொலைச் சம்பவம் குறிப்பிடத்தக்கது.தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (வயது 26), சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வந்தவர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், தனது தாத்தாவின் உடல்நலக் குறைவு காரணமாக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார். மருத்துவமனை வாசலில் காத்திருந்தபோது, சுர்ஜித் (வயது 24) என்பவர் கவினை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, பின்னர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்தக் கொலை காதல் விவகாரத்தால் நடந்த ஆணவக் கொலை எனக் கருதப்படுகிறது. கவின் மற்றும் சுர்ஜித்தின் சகோதரியான சுபாஷினி ஆகியோர் பள்ளி காலத்தில் இருந்து நண்பர்களாக இருந்து, பின்னர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது ...