Posts

Showing posts with the label Tamil Nadu bride suicide

“குழந்தையே இல்ல.. அப்போ எதுக்கு இது..?” தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு அரங்கேறிய கொடுமை.. கோரமான முடிவு!

Image
தூத்துக்குடி, நவம்பர் 21: திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் குழந்தை இல்லாததை காரணம் காட்டி கணவரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து மன உளைச்சல் கொடுத்ததால் மனமுடைந்த இளம் பெண் ஜெமீலா (வயது 25), தனது தாய் வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த தஸ்னேவிஸ் - ராஜேஸ்வரி தம்பதியின் ஒரே மகள் ஜெமீலா. தந்தை இறந்த பிறகு தாய் ராஜேஸ்வரி சிறிய பெட்டிக்கடை நடத்தி மகளை பி.காம் வரை படிக்க வைத்தார். காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பெனோ (28) என்பவருடன் ஜெமீலா சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தார். இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் 2023 செப்டம்பர் 17-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு ஜெமீலா, கணவர் பெனோ, மாமனார் லீனஸ், மாமியார் ஆகியோருடன் வசித்து வந்தார். அருகே பெனோவின் அக்கா ஜெனிட்டா - சுதர்சன் தம்பதியும் குடும்பத்துடன் வசித்து வந்தனர். பெனோ மீன்பிடித் துறைமுகத்தில் மீன் ஏலம் கூறும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். திருமணத்துக்குப் பிறகு ஜெமீலாவுக்கு மூன்று முறை கரு உண்டா...