Posts

Showing posts with the label Tamil Nadu school

“விட்ருங்க சார்.. ப்ளீஸ் சார்..” தெரியலனா ஒரு முறை... தப்பு பண்ணா 20 முறை.. 5-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்..

Image
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அனுப்பம்பட்டு பகுதியில் இயங்கும் சேயோன் பிரைமரி அண்ட் நர்சரி தனியார் பள்ளியில், கணிதப் பாடத்தில் தவறு செய்ததாகக் கூறி 10 வயது மாணவியை (5ஆம் வகுப்பு) தலைமை ஆசிரியரும் பள்ளி தாளாளருமான அருளதாஸ் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தாயார் கலைவாணி கூறுகையில், "கணித சம்ஸ் (மேத்ஸ்) தெரியுமா என்று ஆசிரியர் கேட்டார். தெரியாது என்று மகள் சொன்னால் ஒரு அடி மட்டும் அடிப்பேன், தவறாக சொன்னால் 20 அடி அடிப்பேன் என்று மிரட்டினார். அதனால் தெரியாது என்று சொன்னதும், 'தெரிந்தும் தெரியாது என்று பொய் சொல்கிறாயா' என்று கோபமடைந்து முதுகில் ரத்தக் காயங்கள் ஏற்படும் அளவுக்கு அடித்தார். 'விட்டுவிடுங்கள் சார், விட்டுவிடுங்கள் சார்' என்று மகள் கதறியும் விடவில்லை. 'வாயை மூடு, சத்தம் வரக்கூடாது' என்று கூறியும் அடித்தார்" என்றார். சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவி உடல் வலி காரணமாக சாப்பிடாமல், பை தூக்க முடியாமல் தவித்துள்ளார். வீட்டில் ஆடை மாற்றும் போது முதுகு முழுவதும் சிவந்து ரத்தக் காயங்களுடன் காணப்பட்டத...