அஜித்குமார் மரணத்திற்கு காரணம் இது தான்! தன் வாயாலேயே உளறிய நிகிதா! பகீர் வீடியோ!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் (27) மரண வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 28, 2025 அன்று, மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாய் சிவகாமி அளித்த 10 பவுன் நகை திருட்டு புகாரின் அடிப்படையில், அஜித்குமார் திருப்புவனம் காவல் நிலையத்தின் தனிப்படையால் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, அவர் கோயிலின் பின்புற மாட்டுத் தொழுவத்தில் கம்பு, பிளாஸ்டிக் குழாய் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு, வாயிலும் பிறப்புறுப்பிலும் மிளகாய் பொடி தடவப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் தீரன், மதுரை உயர் நீதிமன்றத்தில் அஜித்குமாரின் தரப்பில் வாதாடுகையில், நகை திருட்டு புகார் முற்றிலும் போலியானது என்று குற்றம்சாட்டியுள்ளார். அவரது வாதத்தின்படி, அன்றைய தினம் கோயிலில் நிகிதாவின் மாற்றுத்திறனாளி தாயாரை வீல்சேரில் அமரவைத்து, கூட்ட நெரிசலில் தரிசனத்திற்கு அழைத்துச் சென்று பா...