மொத்த கேஸையும் புரட்டி போட்ட CCTV காட்சி.. நிகிதாவை சுற்றி வளைத்த CBI..
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மதப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதுகாவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27) மரண வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 27, 2025 அன்று, நகை திருட்டு புகாரின் அடிப்படையில் அஜித்குமார் காவல்துறையால் காவலில் எடுக்கப்பட்டு, விசாரணையின்போது கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில், புகார் அளித்த ஜே.பி. நிகிதாவின் கூற்றுகள் பொய்யாக இருக்கலாம் என சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது.நிகிதா, தனது தாயுடன் கோயிலுக்கு வந்தபோது, காரை பார்க் செய்ய அஜித்குமாரிடம் சாவி கொடுத்ததாகவும், பின்னர் 9½ சவரன் நகைகள் காரில் இருந்து திருடப்பட்டதாகவும் புகார் அளித்தார். அவர், அஜித்குமார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அருண் ஆகியோர் காரை வடகரைக்கு ஓட்டிச் சென்று நகைகளை திருடியதாக கூறினார். ஆனால், சி.பி.ஐ. விசாரணையில், கோயில் பார்க்கிங்கில் இருந்து கார் எங்கும் செல்லவில்லை என்பது உறுதியானது. சி.பி.ஐ. ஆய்வு செய்த சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சியங்களின்படி, அஜித்குமார் காரை பார்க் செய்ய ஆட்டோ ஓட்டுநர் அருணிடம் சாவியை ஒப்படைத்து, ஐந்து நிமிடங்களில் நிகிதாவிடம் திருப்ப...