Posts

Showing posts with the label Tiruvarur

"ஹேய்.. அவளுக்கும் ஊத்து டி.. ப்பா.. தூக்குதே.." தமிழ்நாடு அரசு கல்லூரியில் மது அருந்தும் மாணவிகள்! வெளியான புதிய வீடியோ!

Image
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிடாரங்கொண்டான் பகுதியில், தியாகராஜர் கோயில் வளாகத்தில் 1971-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி (Thiru Vi Ka Government Arts College) செயல்பட்டு வருகிறது. கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கல்லூரியில், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரியின் அறிவிப்பு பலகையில் "பொறுப்பான நல்ல குடிமக்களாக மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தல்", "அனைத்து துறைகளிலும் அறிவைப் பெற உயர்கல்வி புகட்டுதல்" போன்ற செயல்நோக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இதையெல்லாம் மாணவிகள் வேறு விதமாகப் புரிந்து கொண்டனரோ என்னும்படியான சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் துறையில் பயிலும் மாணவிகள், கல்லூரியில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சிக்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, வகுப்பறையிலேயே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மது அருந்தியுள்ளனர். இந்தக் காட்சி ஒரு நிமிட அளவிலான வீடியோவாக பதிவாகியுள்ளது. வீடியோவில், மாணவிகள் ...

மின்தடை : நாளை (28-01-2026) எந்தெந்த மாவட்டத்தில், எந்தெந்த பகுதியில் - முழு விபரம்

Image
தமிழகத்தில் நாளை (28-01-2026, புதன்கிழமை) பல்வேறு மாவட்டங்களில் TNPDCL (தமிழ்நாடு மின்சார வாரிய விநியோகக் கழகம்) சார்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை பெரும்பாலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை (அல்லது 2 மணி வரை சில இடங்களில்) நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (குறிப்பிட்ட நேரங்கள் பகுதிக்கு ஏற்ப மாறுபடலாம்; TNPDCL இணையதளத்தில் உறுதிப்படுத்தவும்).மின்தடை ஏற்படும் முக்கிய பகுதிகள் பின்வருமாறு: கோவை மாவட்டம் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தாடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, கே.என்.ஜி.புதூர், வித்யா காலனி, சாஜ் கார்டன், குனியமுத்தூர், சுந்தராபுரத்தின் ஒரு பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி.ஜி.பாளையம், குமாரபாளையம், மேலப்பாளையம், வடவேடம்பட்டி, வத்தம்பச்சேரி, மந்திரிபாளையம். மேட்டூர் பகுதி தோப்பூர், சேகரப்பட்டி, கம்மம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார்,...