"சிறை" திரைப்படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
1990களின் தமிழ்நாடு. கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு சமூகத்தில் பரவிய இஸ்லாமிய வெறுப்பு, சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சம், நீதி தாமதமாகும் அவலம் – இவையெல்லாம் பின்னணியில் நகரும் ஒரு சாலைப் பயணக் கதைதான் 'சிறை'. வேலூர் சிறையிலிருந்து சிவகங்கை நீதிமன்றத்துக்கு ஒரு கொலை குற்றவாளியை அழைத்துச் செல்லும் ஆயுதப்படை போலீஸ் ஏட்டு கதிரவன் (விக்ரம் பிரபு). அந்தக் கைதி அப்துல் ரவூஃப் (எல்.கே. அக்ஷய் குமார்). பஸ்ஸில் தொடங்கும் அந்தப் பயணம், இருவரின் வாழ்வையும் தலைகீழாக மாற்றிப்போடுகிறது. கதிரவன் ஒரு நேர்மையான, கடமையுணர்வு மிக்க போலீஸ். மனைவியுடன் சின்னஞ்சிறு ஊடல்கள், நண்பர்களுக்காக அதிகாரிகளிடம் பேசும் தயக்கம் – இயல்பான வாழ்க்கை அவருக்கு. ஆனால் அப்துலை அழைத்துச் செல்லும் போது, பயணத்தில் நடக்கும் சில சம்பவங்கள் அவரை ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன. அப்துல் ஐந்து ஆண்டுகளாக விசாரணைக் கைதியாகச் சிறையில் வாடுகிறான். அவனுக்கு வக்கீல் இல்லை, பிணை இல்லை – காரணம், அவன் முஸ்லிம் என்ற ஒற்றைப் பெயர். அப்துலின் கடந்த காலம் ஃப்ளாஷ்பேக்கில் வருகிறது: சிவகங்கை கிராமத்தில் கலையரசி (அனிஷ்மா அனில்...