Posts

Showing posts with the label resident demand

தமிழ்நாடு : “83 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்” முதற்கட்ட விசாரணையில் வெளியான நடுங்க வைக்கும் தகவல்!

Image
நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் அண்ணாமலை நகரில் தனியாக வசித்து வந்த 83 வயது மூதாட்டி முத்துலெட்சுமி மீது கொடூர பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டி தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முத்துலெட்சுமியின் மகன் மற்றும் மகள்கள் திருமணமாகி தனித்தனி குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவர் தனியாக வீட்டில் இருந்து வந்தார். வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாத அவருக்கு உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் உதவி செய்து வந்தனர். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் உறவினர்கள் உணவு கொடுத்து வந்தனர். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் உணவு கொடுக்க வந்த உறவினர் ஒருவர், மூதாட்டியை அலங்கோலமான நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் மூதாட்டி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்...