Posts

Showing posts with the label salary payment

சாத்தான்குளம் வழக்கு 'கொலைகாரர்களுக்கு இன்னும் மாசம் மாசம் சம்பளம் கொடுத்துட்டு இருக்கு தமிழ்நாடு அரசு'

Image
தூத்துக்குடி : சாத்தான்குளம் போலீஸ் காவலர்கள் இருவரை சிறையில் அடித்துக் கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளித்த பின்னரும், அவர்களுக்கு தமிழக அரசு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்குவதை கண்டித்து ஏப்ரல் 1-ம் தேதி தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது. சமூக ஆர்வலர்கள், தகவல் அறியும் உரிமை (RTI) ஆர்வலர்கள் சார்பில் நடைபெறும் இந்த மனு கொடுக்கும் போராட்டம், டிராபிக் ராமசாமியின் பிறந்தநாள் நாளில் நடைபெறுகிறது. இந்திய அரசு ஊழியர் விதிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி, அரசு ஊழியர் சிறை சென்ற உடனேயே சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். FIR பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு, பதவி நீக்கம் அல்லது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் சாத்தான்குளம் கொலை வழக்கில் 6 ஆண்டுகளாகியும் இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை என ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விசாரணை அதிகாரிகள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்காததால், குற்றவாளிகளுக்கு 75% (முக்கால்) சம்பளம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நீ...