“உனக்கு எதுக்கு இம்மாம் பெரிய மீசை..” அஜித்குமார் மரணம்.. ஆர்யாவின் பதில்.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, காவல்துறையினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையில் உள்ள நிலையில், ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் ஆர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், இந்த கொலை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆர்யா, இந்தக் கேள்வியை பொறுமையாக தலையாட்டி, “வேறு கேள்வி கேளுங்கள் அண்ணா,” என்று பதிலளித்து, அடுத்த கேள்விக்கு நகர முயற்சித்தார். இந்தப் பதில், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. இணையவாசிகள், திமுக ஆட்சியில் நடைபெறும் சமூக அவலங்கள் குறித்து திரையுலகினர் வாய் திறக்க தயங்குவதாகவும், ஆர்யாவின் இந்த மவுனம் அதற்கு உதாரணமெனவும் விமர்சித்து வருகின்றனர். “திமுகவின் இரும்பு கரம் திரையுலகை அடக்கி வைத்துள்ளது,” என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ...