திருமண நாளன்று ஆண் நண்பருடன் ஊர் சுற்றிய இன்ஸ்டா பிரபலம்.. கணவர் வெறிச்செயல்..!
கடலூர், அக்டோபர் 5 : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சேர்ந்த செந்தில்வேல் என்பவர், தனது காதல் திருமணம் செய்த மனைவி மகேஸ்வரியை கோபத்தில் குளவி கல்லால் தாக்கி, பின்னர் இரும்பு கம்பியால் மூர்க்கமாகத் தாக்கி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்குப் பின்னணியாக கள்ளக்காதல், சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோக்கள், வழிப்பறி வழக்குகள் உள்ளிட்டவை இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளியை பண்ருட்டி பேருந்து நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், காடாம்புலியூர் சேர்ந்த செந்தில்வேலை காதலித்து திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பின், மகேஸ்வரி இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிட்டு, தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இதன் விளைவாக, குழந்தைகளையும் கணவரையும் புறக்கணித்து பவுசாக உலா வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டன.இதற்கிடையே, செந்தில்வேல் திருநங்கைகளுடன் நெருக்கமாகப் பழகியதாகவும், ...