மஃப்டியில் பெண் கமிஷனர்! அத்துமீறிய 40 ஆண்கள்! நள்ளிரவில் சம்பவம்!
ஹைதராபாத்: தெலங்கானாவின் மல்கஜ்கிரி (மைல்கிரி) பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக பொறுப்பேற்ற முதல் பெண் போலீஸ் கமிஷனர் சுமதி, நடுராத்திரியில் சாதாரண பெண்ணாக மாறி அண்டர் கவர் ஆபரேஷன் நடத்தி 40 பேரை கையும் களவுமாக பிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த மே 1-ம் தேதி மல்கஜ்கிரி போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற சுமதி, பகுதியில் இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பாக வெளியே வர முடியாத சூழல் இருப்பதாக புகார்கள் வந்ததையடுத்து, இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். நள்ளிரவு 12 மணிக்கு பேருந்து நிலையத்தில்... இரவு 12 மணி அளவில் சீருடை அணியாமல், சாதாரண உடையில் ஒரு பொதுமகள் போல மல்கஜ்கிரி பேருந்து நிலையத்தில் தனியாக நின்றார் சுமதி. அவருக்கு துணையாக போலீஸ் அதிகாரிகள் தூரத்தில் மறைந்து கண்காணித்து வந்தனர். சிறிது நேரத்தில் அங்கு ஆண்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பலர் சுமதியை சீண்டத் தொடங்கினர். மோசமான வார்த்தைகளால் பேசி, வம்பிழுத்தனர். சுமார் மூன்று மணி நேரம் இந்த ஆபரேஷன் நீடித்தது. இறுதியில், சீண்டிய 40 ஆண்களை போலீசார் குண்டுக்கட்டாக பிடித்த...