Posts

Showing posts with the label vote margins

பதவியேற்புக்கு நாள் குறித்த விஜய்! எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் தெரியுமா?

Image
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்காத சூழலில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் அளப்பறையின் உச்சத்தில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் இன்னும் 8-9 நாட்கள் இருக்கும் நிலையில், அவர்கள் ஏற்கெனவே வெற்றி போஸ்டர்களை அடித்து ஒட்டி, விஜய்யை முதலமைச்சராக்கியதாக அறிவித்து, அமைச்சரவை பட்டியல் வரை தயாரித்து வைத்துள்ளனர். சென்னை பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், திருப்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் விஜயராஜ் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில், “தளபதி விஜய் அண்ணாவை 206-வது தமிழ் முதல்வராக்கிய பொதுமக்களுக்கு நன்றி” என்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பகுதியில் இந்த போஸ்டர்கள் ஏற்கெனவே ஒட்டப்பட்டு பரவலாகப் பகிரப்படுகின்றன. இது மட்டுமின்றி, TVK தொண்டர்கள் முழு அமைச்சரவை பட்டியலையும் தயாரித்து வைத்துள்ளனர். விஜய் முதலமைச்சர் பொறுப்புடன் உள்...