பதவியேற்புக்கு நாள் குறித்த விஜய்! எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் தெரியுமா?

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்காத சூழலில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் அளப்பறையின் உச்சத்தில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகள் இன்னும் 8-9 நாட்கள் இருக்கும் நிலையில், அவர்கள் ஏற்கெனவே வெற்றி போஸ்டர்களை அடித்து ஒட்டி, விஜய்யை முதலமைச்சராக்கியதாக அறிவித்து, அமைச்சரவை பட்டியல் வரை தயாரித்து வைத்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், திருப்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் விஜயராஜ் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளன.

அதில், “தளபதி விஜய் அண்ணாவை 206-வது தமிழ் முதல்வராக்கிய பொதுமக்களுக்கு நன்றி” என்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பகுதியில் இந்த போஸ்டர்கள் ஏற்கெனவே ஒட்டப்பட்டு பரவலாகப் பகிரப்படுகின்றன.

இது மட்டுமின்றி, TVK தொண்டர்கள் முழு அமைச்சரவை பட்டியலையும் தயாரித்து வைத்துள்ளனர். விஜய் முதலமைச்சர் பொறுப்புடன் உள்துறை பொறுப்பையும் வகிப்பார் என்றும், மற்ற அமைச்சர்களுக்கு பின்வரும் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பட்டியல் கூறுகிறது:

  • பெரம்பூர் விஜய் – பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை
  • கோபி செட்டிபாளையம் செங்கோட்டையன்– பொதுப்பணித்துறை
  • ஆதவ் அர்ஜுன் – செய்தி மற்றும் விளம்பரத் துறை / சுற்றுலாத் துறை
  • தி.நகர் ஆனந்த் – போக்குவரத்துத் துறை
  • மயிலாப்பூர் வெங்கட்ராமன் – நிதித்துறை
  • அருண்ராஜ் – உணவுத் துறை
  • மரியவில்சன் – உயர்கல்வித் துறை
  • நிர்மல் குமார் – சீர்மரபினர் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை
  • காரைக்குடி பிரபு – பால்வளத் துறை
  • விஜய் நிரஞ்சன் – தகவல் தொடர்புத் துறை
  • மதுராந்தகம் எழில் கேந்திரன் – சுகாதாரத் துறை

மொத்தம் 29 அமைச்சர்கள் பட்டியல் இப்படி தயாரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும், விஜய் முதலமைச்சராக மே 8-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்பார் என்ற தேதியும் TVK தொண்டர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோசியர்கள் இந்த தேதியை உறுதி செய்ததாகவும், விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் இந்த தகவலைப் பகிர்ந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளையில், புள்ளிவிவரங்களின்படி சென்னையில் இந்தத் தேர்தலில் முந்தைய தேர்தலைவிட சுமார் 3 லட்சம் வாக்குகள் குறைந்துள்ளன. ஆனாலும் TVK தொண்டர்களின் உற்சாகம் எந்தவித பாதிப்பும் இன்றி உச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முன்கூட்டிய கொண்டாட்டங்கள் மற்றும் அளப்பறைகள் தற்போது டிஜிட்டல் உலகில் பெரும் பரபரப்பையும், சிலருக்கு பொழுதுபோக்கையும் ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இந்த ‘வைரல் அளப்பறை’ தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary in English : TVK supporters are showing high enthusiasm after the election. They have released victory posters for Vijay and other candidates with vote margins. A detailed cabinet list with 29 ministers and their departments is circulating. They have fixed May 8 as the date for Vijay to assume office as Chief Minister.