Posts

Showing posts with the label wife confession

ஆட்டோ ட்ரைவருடன் கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த மனைவி.. ஆடுகள் மேய்க்கும் கணவருக்கு நேர்ந்த கொடூரம்..

Image
கர்நாடகா மாநிலத்தில் கதக்கலட் என்ற சிறிய கிராமம். 2026 ஜூலை 5ஆம் தேதி அங்கே ஒரு இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தது. வயதான அம்மா இரவில் தூங்கும்போதே உயிரிழந்துவிட்டார்கள். காலையில் எழுந்திருக்கவில்லை. ஊர் மக்கள் அனைவரும் கூடியிருந்தார்கள். அந்த அம்மாவை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அனைவரின் மனதிலும் ஒரே கேள்வி மட்டும்தான் சுற்றிக் கொண்டிருந்தது. மூத்த மகன் லக்மணா கவுடா அங்கே இருந்தார். இறுதிச் சடங்கை அவர்தான் நடத்தினார். ஆனால் இளைய மகன் ரகு கவுடா எங்கே? அவர் எப்போதும் வெளியூருக்குச் சென்று சில மாதங்கள் கழித்து வருவார். அம்மா இறந்த செய்தி அவருக்குத் தெரியுமா? தெரியாமல் எப்படி இறுதிச் சடங்கு செய்ய முடியும் என்று ஊர் மக்கள் கேட்டார்கள். லக்மணா தன் தம்பியின் மனைவி பங்காரியிடம் கேட்டார். “என் தம்பி எங்கே போனான்? அம்மா இறந்ததையும் தாண்டி அவன் காசு சம்பாதிக்கவா போனான்?” என்று. பங்காரி சொன்னார் – பிப்ரவரி மாதம் ஆடு மேய்க்கவும் விற்கவும் வெளியூர் சென்றார். ஆடு விற்று காசு வந்ததும் திரும்புவேன் என்றார். மார்ச் மாதம் ஒருமுறை மட்டும் அழைத்தார். அதற்குப் பிறகு போன் முழுவதும் சுவிட்ச் ஆஃப். உங்க அம்...