லூஸ் மோசன் வரும்.. பராசக்தி.. ED ரெய்டு.. குறித்து எதிர்பார்க்காத பதிலை கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா!
பிரபல இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாகப் பேசினார். பெண்கள் ஏன் திரைப்பட இயக்குனர்களாக அதிகம் வருவதில்லை என்ற கேள்விக்கு, சுதா கொங்கரா, “பெண்களுக்கு திருமணம், குழந்தை பெறுதல் போன்ற குடும்பப் பொறுப்புகள் முதன்மையாக இருக்கின்றன. குறிப்பிட்ட வயதில் இந்தப் பொறுப்புகளை முடித்த பின்னரே, அவர்கள் தங்கள் தனிப்பட்ட லட்சியங்களைப் பற்றி சிந்திக்க முடியும். ஆனால், சினிமாவை முழு மனதுடன் அர்ப்பணிப்பாக எண்ணும் பெண்களுக்கு இந்தப் பொறுப்புகள் தடையாக இருக்காது. மன உறுதியுடன் இருக்கும் பெண்கள் நிச்சயம் வெற்றி பெற முடியும்,” என்றார். மேலும், தனது ஆரம்ப கால அனுபவங்களைப் பகிர்ந்த அவர், “நடிகர்களிடம் கதை சொல்லும்போது, முழு கதையையும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால், எனக்கு அது மிகவும் கடினமாக இருக்கும். கதையை எழுதி, திரைக்கதையாகக் கொடுப்பதே என் விருப்பம். இருப்பினும், பட வாய்ப்புக்காக பலமுறை கதையைச் சொல்ல வேண்டி...