"இதை பொருத்து தான் என் மூடு இருக்கும்...." - காதலர் தினம் பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!


தமிழில் 'காதலர் தினம்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தனர் நடிகை சோனாலி பிந்த்ரே. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு, பம்பாய் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். 
 
இந்தியில் முன்னணி நடிகையாகவும் இருந்தார். இவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மும்பையில் சிகிச்சை பெற்ற இவர் பின் உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்றார். 
 
தலைமுடியை அகற்றி மொட்டை தலையுடன் இருக்கும் படத்தையும், புற்று நோய் சிகிச்சையால் தன்னுடைய கண் பார்வைக்கும் மங்கி போய் விட்டதாக கூறினார்.
 
மேலும் சிகிச்சை குறித்து அவர் விளக்கமாக கூறியபோது, கைவிரலை சிறிதளவு உயர்த்தவும் கஷ்டப்பட்டேன். சிரிப்பிலும் வலியை உணர்ந்தேன். கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு அறுவை சிகிச்சை நடந்தது அந்த நாட்கள் மிகவும் துயரமானது. 
 
உடலில் தொடங்கிய வழி மனம் முழுவதையும் ஆக்கிரமித்தது என்கிறார்.கடந்த 2 மாதங்களுக்கு முன்னால் குணமடைந்து நாடு திரும்பினார். தற்போது சோனாலி குறித்து அவர் கணவர் கூறுகியில், சோனாலிக்கு புற்றுநோய் சிகிச்சை முடிந்துள்ளது. 
 
நோய் திரும்பவும் வர வாய்ப்புள்ளதால் அடிக்கடி சோதனைக்காக அமெரிக்கா செல்ல வேண்டும். சில வாரங்கள் வீட்டில் ஓய்வு எடுத்த சோனாலி பிந்த்ரே மீண்டும் நடிக்க வந்துள்ளார். 
 
தற்போது விளம்பர படம் ஒன்றில் நடிக்கிறார். விரைவில் இந்தி படத்திலும் நடிக்க உள்ளார்.மேலும் சோனாலி மீண்டும் நடிக்க வந்ததுமட்டுமில்லாமல் சமூக வலைதலங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
 


இந்நிலையில், என்னுடைய ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கிறதோ.. அதை பொருத்து தான் என்னுடைய மூடு இருக்கும்.. என்று வாசகம் பதிந்த டீ சர்ட்டை அணிந்த படி போஸ் கொடுத்துள்ளார்.

"இதை பொருத்து தான் என் மூடு இருக்கும்...." - காதலர் தினம் பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! "இதை பொருத்து தான் என் மூடு இருக்கும்...." - காதலர் தினம் பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! Reviewed by Tamizhakam on December 01, 2020 Rating: 5
Powered by Blogger.