லெஜெண்ட் "சரவணன்" படத்தின் ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? - தெரிஞ்சா தூக்கிவாரிப்போட்ரும்..!


லெஜன்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் அருள் நடிக்கும் படத்தில் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது.அவரது கடையின் விளம்பரத்தில் இளம் நடிகைகள் முதல் வெளிநாட்டு அழகிகள் வரை அழைத்து வந்து ஆடி வந்த அவர், தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
 
சரவணன் அருளின் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை எடுத்தும் வரும் இயக்குநர்கள் ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோரே அவர் நடிக்கும் வெள்ளித்திரை படத்தையும் இயக்கி வருகின்றனர். 
 
இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்கள்.இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியானது. 
 
அப்போதே படப்பிடிப்பும் தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது.தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அண்ணாச்சி நடிக்கும் படத்தின் ஷுட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. 
 

இந்நிலையில் இந்த பிரம்மாண்ட படத்தின் நாயகியாக தற்போது பிரபல பாலிவுட் நாயகி ஊர்வசி ராவ்டேலா இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லெஜெண்ட் "சரவணன்" படத்தின் ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? - தெரிஞ்சா தூக்கிவாரிப்போட்ரும்..! லெஜெண்ட் "சரவணன்" படத்தின் ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? - தெரிஞ்சா தூக்கிவாரிப்போட்ரும்..! Reviewed by Tamizhakam on March 13, 2021 Rating: 5
Powered by Blogger.