Posts

Showing posts with the label Sumathi

மஃப்டியில் பெண் கமிஷனர்! அத்துமீறிய 40 ஆண்கள்! நள்ளிரவில் சம்பவம்!

Image
ஹைதராபாத்: தெலங்கானாவின் மல்கஜ்கிரி (மைல்கிரி) பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக பொறுப்பேற்ற முதல் பெண் போலீஸ் கமிஷனர் சுமதி, நடுராத்திரியில் சாதாரண பெண்ணாக மாறி அண்டர் கவர் ஆபரேஷன் நடத்தி 40 பேரை கையும் களவுமாக பிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த மே 1-ம் தேதி மல்கஜ்கிரி போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற சுமதி, பகுதியில் இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பாக வெளியே வர முடியாத சூழல் இருப்பதாக புகார்கள் வந்ததையடுத்து, இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். நள்ளிரவு 12 மணிக்கு பேருந்து நிலையத்தில்... இரவு 12 மணி அளவில் சீருடை அணியாமல், சாதாரண உடையில் ஒரு பொதுமகள் போல மல்கஜ்கிரி பேருந்து நிலையத்தில் தனியாக நின்றார் சுமதி. அவருக்கு துணையாக போலீஸ் அதிகாரிகள் தூரத்தில் மறைந்து கண்காணித்து வந்தனர். சிறிது நேரத்தில் அங்கு ஆண்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பலர் சுமதியை சீண்டத் தொடங்கினர். மோசமான வார்த்தைகளால் பேசி, வம்பிழுத்தனர். சுமார் மூன்று மணி நேரம் இந்த ஆபரேஷன் நீடித்தது. இறுதியில், சீண்டிய 40 ஆண்களை போலீசார் குண்டுக்கட்டாக பிடித்த...

பார்சலில் வந்த அந்த பொருள்.. 500 அடி பள்ளத்தில் கிடந்த சடலம்.. கண்டவனோடு உல்லாசம்.. நெஞ்சை உலுக்கு பகீர் சம்பவம்..

Image
சேலம் மாவட்டத்தின் அழகிய மலைப்பகுதியான ஏற்காடு அருகே மாரமங்கலம் கிராமம். இங்கு வசித்து வந்தவர் லாரி ஓட்டுநர் சண்முகம். சில ஆண்டுகளுக்கு முன், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே மெட்டாலா கிராமத்தில் வேலைக்காகச் சென்ற போது, அங்கு சுமதி என்ற இளம்பெண்ணை சந்தித்தார். இருவரும் காதலித்தனர். குடும்பத்தினரின் சம்மதத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லாத அவர்களின் வாழ்க்கை அமைதியாகவே சென்று கொண்டிருந்தது. சண்முகம் வேலைக்காக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். அப்படி ஒரு முறை வெளியூரில் இருந்த போது, டிசம்பர் 23 அன்று மனைவி சுமதிக்கு போன் செய்தார். போன் சுவிட்ச் ஆஃப். கவலையடைந்த சண்முகம், உறவினர்களிடம் விசாரித்தார். சுமதி வீட்டில் இல்லை என்று தெரிந்தது. உடனே சொந்த ஊர் திரும்பிய அவர், எங்கு தேடியும் மனைவியைக் காணவில்லை. இரு நாட்கள் கழித்து ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தேடுதலைத் தொடங்கினர். அதே நேரம், ஒரு அரசு பேருந்து ஓட்டுநர் ஒரு பார்சலை பீடாக்கடைக்காரரிடம் கொடுத்து, மாரமங்கலத்தில் சண்முகத்திடம் சேர்க்கச் சொன்னார். அதை வாங்கிய 22 வய...