தர்பூசணியால் 4 பேர் மரணமா? தடயவியல் ரிப்போர்ட்டில் பகீர் நாட்டையே உலுக்கிய சர்ச்சை உடைய ஆரம்பித்த மர்மம்!
மும்பை : கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இரவு தெற்கு மும்பை பைதோனி மொகுல் குடியிருப்பில் நடைபெற்ற குடும்ப விருந்துக்குப் பின், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியாணி சாப்பிட்ட பின்னர் தர்பூசணி சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதா என்கிற சந்தேகம் எழுந்த நிலையில், தடயவியல் (போஸ்ட்மார்ட்டம்) அறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.பலியானவர்கள் யார்? இறந்தவர்கள்: அப்துல்லா டோகாடியா (40) அவரது மனைவி நசீம் (35) மகள் ஆயிஷா (16) மகள் ஜைனாப் (13) அப்துல்லா அந்தேரி பகுதியில் மொபைல் உதிரி பாகங்கள் கடை நடத்தி வந்தார். ஏப்ரல் 25ஆம் தேதி சனிக்கிழமை இரவு அவரது சகோதரர், சகோதரி உள்ளிட்ட ஐந்து உறவினர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தனர். இரவு 10:30 மணியளவில் ஒன்பது பேரும் சிக்கன் பிரியாணி உணவு உண்டனர். விருந்தினர்கள் சென்ற பின்னர் நள்ளிரவில் அப்துல்லா, நசீம் மற்றும் இரு மகள்கள் மட்டும் தர்பூசணி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த நாள் அதிர்ச்சி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் நால்வருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏ...