இந்த படத்திற்கு விருது வேண்டும் - மத்திய அரசை வம்பிழுத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்..!
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்வாயை திறந்தாலே ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயத்தை உதிர்த்து விட்டு போய்விடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சின் அதிர்வுகளே இன்னும் குறையாத நிலையில் தற்போது அவரது அப்பா புதிய அதிர்வை கிளப்பி விட்டுள்ளார் இந்திய சினிமாவின் புதிய முயற்சியாக தனி ஆளாக ஒத்த செருப்பு என்ற படத்தை நடித்து,இயக்கி, தயாரித்துள்ளார் நடிகர் பார்த்திபன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த படம் குறித்து பேசுகையில், பார்த்திபன் நிஜமாகவே ஒரு ஜீனியஸ். ஒரு படத்திலாவது அவருடைய அஸிஸ்டெண்ட் டைரக்டரா, சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கணும் என்று பேசினார். பார்த்திபனின் இந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை என்றால் அது மத்திய அரசு தன்னுடைய மதிப்பையே இழப்பதற்கு சமம். இந்த படத்திற்கு தேசிய விருது அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்றால் அவர்கள் விருதுகள் கொடுப்பதற்கான அளவுகோல் என்ன என்று தெரியவில்லை...